பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 ஒடுக்குவதற்குச் சீன நாட்டுக்குப் போர் விமானங்களையும், வெடிகுண்டுகளையும், வேறு கொலைக்கருவிகளையும் அனுப்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை யென்று தொன்று தொட்டே பேர்ல் பக் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஆசிரியை கூறிவந்தார். பசியும் பஞ்சமும் மிகுந்த இடத்திலேயே கம்யூனிஸம் வேரூன்றித் தழைக்கும் என்றும், போர்க் கருவிகளுக்குப் பதிலாக, விவசாயத்தை விருத்தி செய்ய இயந்திரக் கலப்பைகளையும், மற்றும் பல கருவிகளையும் அனுப்பிவர வேண்டுமென்றும் அவர்தம் கட்டுரைகளின் மூலம் விளக்கினர். சீனாவை நன்கறிந்திருந்த வேறு சிலரும் அதே கருத்துக்களைக் கூறிவந்தனர். ஆனால் அமெரிக்கா கவனிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா இது வரை கையாண்டு வந்த கீழ்த் திசைக் கொள்கையே தகர்ந்து கொண்டிருந்தது. அமெரிக்கா கோமிண் டாங்குக்கு அளித்துவந்த ஆயுதங்கள் கம்யூனிஸ்டுப் படையினருக்கே போய்ச் சேர்ந்தன. கோமிண்டாங் சிப்பாய்கள் அவைகளை எதிரிகளுக்கு விற்பதும் வழக்கமாயிற்று. கம்யூனிஸ்டுகள் தங்களே எதிர்த்து வரும் தளபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களுடைய படைகளையும், படைக்கலன்களையும் அப்படியே பெற்றுக் கொண்டுவந்தனர். சியாங் தம்மளவில் தூயவராயிருந்தாலும், தமக்கு உதவியாக இருந்த மந்திரிகளும், உறவினர்களும், அதிகாரிகளும், சுயநலப் புலிகளாகச் சொத்துக்கள் சேர்த்து வந்ததையும், மக்கள் பட்டு வந்த அவதிகளையும் நிறுத்த அவரால் முடியவில்லை. கோமிண்டாங் கட்சியையும், அரசாங்கத்தையும் ஊழல்கள் உள்ளுற அரித்துவிட்டன.

ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியினரும் செஞ்சேனையும் நாள்தோறும் வளர்ந்து உரம் பெற்றுவந்தனர். சுமார் முப்பது ஆண்டுக்காலத்திற்குள், அவர்களுக்கு எத்தனை

133