பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இடையூறுகள் ஏற்பட்ட போதிலும், அவர்கள் வளர்வதற்குரிய வாய்ப்புக்களும் ஏராளமாகக் கிடைத்தன. ஜப்பானியப் போரில் அவர்களே முன்னணியில் நின்றனர். கோமிண்டாங் படைகளையும், சேனாபதி சியாங் கை-ஷேக்கையும் தளரவிடாமல், அயரவிடாமல், அவர்களே ஊக்குவித்து வந்தனர். அவர்களுக்குச் சிந்தனைத் தெளிவும், செயல் திறனும், நெஞ்சுறுதியும் பெற்ற தலைவர்களும் இருந்தனர். ‘சீன நாட்டு லெனின்’ என்று கூறப் பெற்ற மாலே-துங், சேனைகளைச் சேர்த்து நடத்துவதில் தேர்ந்த சூ-தேஹ், கம்யூனிஸ்டுக் கட்சியும் கோமிண்டாங் கட்சியும் இணைந்து செயலாற்றச் செய்துவந்த சூ என்-லாய் முதலியோர் அத்தலைவர்களில் முக்கியமானவர்கள்.

அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டிலே தங்கள் ஆட்சியை நிறுவத்தக்க சமயம் வந்துவிட்டதை அறிந்த கம்யூனிஸ்டுகள், படைகளுடன் எங்கும் பரந்து சென்றனர். நான்கு ஆண்டுகளில் அவர்கள் 80 லட்சம் எதிர்ப்படையினரை அடக்கியும், அழித்தும் வெற்றி கொண்டார்கள். போராட்டம் இல்லாமலேயே பற்பல நகரங்கள் அவர்களுக்குக் கிடைத்துவிட்டன. 1840 முதல் நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் போர்களாலும், புரட்சியாலும், கலகங்களாலும் அல்லலுற்றுத் தவித்துவந்த மக்கள் அவர்களை ஆவலோடு வரவேற்க முற்பட்டனர்.

சீன நாட்டின் புகழ்பெற்ற பழைய தலைநகரான பீகிங்கில் 1949, அக்டோபர் முதல் தேதியன்று மாஸே-துங்கின் தலைமையில் சீனாவின் ‘மக்கள் குடியரசு’ us! # ' (The People's Republic of China) நிறுவப்பெற்றது. சூ என்-லாய் பிரதம மந்திரியாகவும், வெளி நாட்டு மந்திரியாகவும் நியமனம் பெற்றார்.

சீன மக்களின் பிரதிநிதியாகக் கம்யூனிஸ்டுகளின்

134