பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தலைமையில் புதிய மக்கள் குடியரசு ஏற்பட்டுவிட்டது. உடனே ஸோவியத் ரஷ்யா அதை அங்கீகரித்தது. அடுத்தாற்போல், ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுக ளான பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, செக்கோஸ் லோவேகியா, போலந்து, கிழக்கு ஜெர்மனி, அல் பேனியா ஆகியவையும், கொரியா, மங்கோலியா, வியட்னாமும் அதற்கு அங்கீகாரம் அளித்தன. இந்தியா, பர்மா, இந்தோனிஷியா, பாகிஸ்தான், டென் மார்க், ஸ்விட்சர்லாந்து, ஃபின்லந்து நாடுகள் அத னுடன் ஸ்தானிக உறவுகள் கொண்டன. இங்கிலாந்து, இலங்கை, நார்வே, இஸ்ரயேல், ஆப்கானிஸ்தான், ஹாலந்து நாடுகளும் அதையே சீன அரசாங்கமாக ஏற்றுக்கொண்டன.

சீனாவில் கம்யூனிஸ்டு அரசாங்கம் ஏற்பட்டது உலக லோஷலிஸத்தின் மூன்றாவது பெரிய வெற்றி யென்று கம்யூனிஸ்டுகள் பாராட்டுகின்றனர். ரஷ்யாவில் 1919-ஆம் வருடம் புரட்சியின் பயனக ஸோவியத் அரசாங்கம் அமைக்கப்பெற்றது முதல் வெற்றி; ஹிட்லருடைய பாஸிஸ்டுப் படைகளை இரண்டாவது உலகப்போரில் முறியடித்தது இரண்டாவது வெற்றி; பீகிங்கில் மக்கள் குடியரசு, அமைந்தது மூன்றாவது வெற்றி.

நிலைமை முற்றிவிட்டதையறிந்த சியாங் கை - ஷேக், 1949, டிஸம்பர் 8-ந்தேதி ஃபர்மோஸா தீவுக்குச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து 6 லட்சம் படையினரும், 10 லட்சம் சீன அகதிகளும் அங்கே குடியேறினர். அங்கேயே அவர் தமது சீனத் தேசிய சர்க்காரையும் அமைத்துக்கொண்டார். ஃபர்மோஸா 13, 810 சதுர மைல் பரப்புள்ள அழகான தீவு. இது சீனாவுக்குத் தென்கிழக்கில் நூறு மைல் தூரத்திலுள்ளது. இதில் ஏராளமான மலைத்தொடர்கள் உள்ளன.

135