பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்யூனிஸ்ட் சீனா

‘சீனாவின் புரட்சி (ரஷ்யாவின்) பெரிய அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சியாகும். மாபெரும் அக்டோபர் புரட்சி மானிட சரித்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து, உலகத்தின் தோற்றத்தையே மாற்றத் தொடங்கியது ..... சீனப் புரட்சியின் வெற்றி உலகின் தோற்றத்தை மேலும் மாற்றிவிட்டது...புதிய சீன ஸோவியத் யூனியனைத் தலைமையாகக் கொண்ட ஸோஷலிஸ்ட் முகாமைச் சேர்ந்தது. ஸோவியத் யூனியனும், சீனாவும், மற்ற ஸோஷவிஸ்ட் நாடுகளும் ஒற்றுமையும் நேசப்பான்மையுமுள்ள பெரிய ஸோஷலிஸ்ட் குடும்பமாக அமைந்துள்ளன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் தொடர்ச்சியான மிகப் பெரிய நிலப்பரப்பில் உலக மக்களில் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொண்டது இக்குடும்பம்.’

—லியு ஷெள - சி





‘மக்கள் குடியரசு’

16 ஆண்டுகளாகச் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துவருகின்றது. சீன அரசாங்கத்தை ‘மக்கள் குடியரசு’ என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகின்றது.ஆட்சிமுறைக்குப்பெயர்‘ஜனநாயகசர்வாதிகாரம்’(democratic dictatorship). உலகம் முழுதும் ஜனநாயகம் வேறு, சர்வாதிகாரம் வேறு என்றும், ஒன்றுக் கொன்று நேர் எதிரானது என்றும் கருதப்படும். சீனாவில் நடப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார ஆட்சியானலும், அதில் ஜனநாயகத்திற்கும்—அல்லது

137