பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மக்களின் ஆட்சிக்கும்—சிறிது இடமளிக்கப்பட்டிருப்பதாகக் காட்டுவதற்கு ‘ஜனநாயகம்’ என்று சொல்லுகின்றனர் போலும்! சீன ஜனநாயக லீக், கோமிண்டாங் புரட்சிக் கமிட்டி முதலிய எட்டுச் சிறு கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவைகளின் உறுப்பினர்களும் குறைவு; இவைகளின் செல்வாக்கும் அற்பம். 1957-58-இல் இவைகளில் முதன்மையான அங்கத்தினர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியின் குறைகளை எடுத்துச் சொன்னதற்காக மேலும் அடக்கப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை உருவாக்கி உலகுக்கு அளித்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் மார்க்ஸ் எதையும் மூடி மறைக்காமல் அப்பட்டமாக எழுதி வைத்திருக்கிறார். அவருடைய சித்தாந்தத்தைச் செயலில் நடத்திக் காட்டிய ரஷ்யத் தலைவர் லெனினும் சொற்களில் ஐயம், திரிபு, புரட்டுக்கு இடமில்லாமல் பச்சை பச்சையாகவே எழுதியுள்ளார். ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதிது புதிதாகச் சொல்லடுக்குகளே உண்டாக்கி, மக்களையும், பிற நாட்டார்களையும் திகைக்க வைக்கின்றது. அது ‘மக்கள் குடியரசு’ என்பது ‘கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம்’ ஆகும். அது ‘காலனிகளுக்கு உதவி’ என்பது ‘காலணி நாடுகளில் தான் தலையிட்டுக் குழப்பமும் கலகமும் உண்டாக்குதல்’ என்று பொருள்படும். ‘நாடுகளின் விடுதலை’ என்பதை ‘நாடுகளின் மீது சீனப் படையெடுப்பு’ என்று கொள்ளவேண்டும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் ஒரு பெரிய இதிகாசம் போன்றது. அதைத் தோற்றுவித்த தலைவர்களே இப்போதும் தலைமையில் இருந்து அதை நடத்தி வருகின்றனர். கட்சியின் தலைவர் மாலே-துங்; அவருக்கு வலது கரமாகவும் இடது கரமாகவும் இருப்

138