பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 புதிதாக ஒர் அரசு ஏற்பட்டால், அது பிற நாடுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும். சீனக் குடியரசு தோன்றியபின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயரளவில் பிற நாடுகளின் வெறும் அங்கீகாரத்தை மட்டும் கோரவில்லை. எந்தெந்த நாடுகள் சீனாவுக்குரிய நிலப்பகுதி களையோ நகரங்களையோ தம் வசம் வைத்திருக்கின்றனவோ, அந்த நாடுகள், அந்தப் பிரதேசங்களின் உரிமையைச் சீனாவுக்கு விட்டுக்கொடுத்த பிறகே, சீன மக்களின் குடியரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினர். முன்பு எக்காலத்திலாவது சீனா ஆதிக்கியம் நிலவி வந்திருக்கும் நாடுகளையோ, இடங்களையோ, பின்பு மறுபடி தாங்கள் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் உறுதி.

லோஷலிஸ்ட் முகாமும் ஜனநாயக முகாமும்

சீனாவில் கம்யூனிஸ்ட் குடியரசு ஏற்பட்டதிலிருந்து அதன் விளைவுகள் என்னவென்பதை உலகம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. முதல் விளைவு உள்நாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது என்பதைப் பொறுத்தது. இரண்டாவது விளைவு மற்ற உலக நாடுகளைக் கம்யூனிஸ்ட் சீனா எவ்விதம், எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பதாகும். ஸோவியத் ரஷ்யாவும், அதன் ஆதரவு பெற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவும் ஸோஷலிஸ்ட் முகாமைச் சேர்ந்தவை. அவற்றுடன் 65 கோடி ஜனத் தொகையுள்ள சீனாவும் 1949 முதல் சேர்ந்துவிட்டது. எனவே உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியில், உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொண்ட நாடுகள் ஸோஷலிஸ்ட் முகாமைச் சேர்ந்திருக்கின்றன. எஞ்சியுள்ள பல நாடுகள் ஜனநாயக ஆட்சி முறையை மேற்

140