பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நடத்த வேண்டியிருந்தது. ஆயினும் அப்படியும் செய்து வெற்றி பெறலாம் என்று அவர் துணிந்து திட்டம் வகுத்தார். பெரிய நகரங்களில் புரட்சி செய்து பிறகு நாட்டுப் புறங்களைப் கைப்பற்றுவது முன்பு வழக்கம். ஆனால் சீனாவில் ஒதுங்கிக் கிடந்த நாட்டுப் புறங்களை முதலில் வசப்படுத்திக்கொண்டு, பின்னால் தக்க சமயம் வந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி பயிற்சி பெற்ற குடியானவர் படைகளால் நகரங்களைச் சூழ்ந்துகொண்டது.

புரட்சியில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனிப்படை இல்லை. புரட்சியில் வெற்றி பெற்ற பிறகே அங்குச் செஞ்சேனை நிறுவப்பெற்றது. ஆனால் சீனாவில் ஆரம்பம் முதலே கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சேனையைப் பெற்றிருந்தது. அக்கட்சியின் சண்டைகளில் பெரும் பாலானவை வெறும் இராணுவப் போராட்டங்களாகவே இருந்தன. போராடிய வீரர்கள் கம்யூனிஸத்தில் ஒரளவு ஆர்வம் கொண்டிருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் தொழிலாளரின் புரட்சிப் படையினர் அல்லர். இப்படிப் படைகளை வைத்துக்கொண்டு பல்லாண்டுகள் கொலைத் தொழில் செய்து கம்யூனிஸத்தை அமைக்கும் முறையை மார்க்ஸ் கூறவில்லை. மாஸே-துங்கே அதைக் கண்டுபிடித்தவர். அவர் வெற்றியும் பெற்றுவிட்டதால், அதுவும் சரிதான் என்றாகி விட்டது. கரடி கற்றவன் இடறி விழுந்தால், அதுவும் ஒரு வரிசைதானே !

விவசாய நிலங்கள், உலாேகக்கனிகள், மூலாதாரமான இயந்திரத் தொழிற்சாலைகள் முதலியவைகளைத் தனிப்பட்டவர்கள் கைகளில் விடாமல் சமுதாயத்தின் உடைமைகளாக வைத்துக்கொள்வது ஸோஷலிஸ் முறை. இதை ஜனநாயக முறையிலேயும் அமைத்துக் கொள்ள முடியும். இதைப் பலாத்காரப் புரட்சியின்

144