பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூலம் பெற்று, முதலாளித்துவ அரசாங்கத்தைத் தகர்த்தெறிந்து விட்டு, தொழிலாளர் குடியானவரின் சர்வாதிகாரத்தை நிலை நாட்டி, எதிர்ப்புக்கள் அனைத்தையும் ஒழித்துவிடுதல் கம்யூனிஸ்ட் முறை. தொடக்கத்தில் எல்லா மக்களுக்கும் வேலை கிடைக்கும் ; வேலைக்குத் தக்க கூலிக்கும் உறுதியளிக்கப்படும். ஆனால் கம்யூனிஸத்தின் இறுதி லட்சியம் ஒவ்வொருவரின் திறமைக்குத் தகுந்த வேலை, ஒவ்வொருவரின் தேவைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கவேண்டும் என்பது. இந்த இலட்சியம், 48 ஆண்டுகளாகியும், இன்று வரை ரஷ்யாவிலேயே நிறைவேறவில்லை; ரஷ்யா இந்த இலட்சியத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. புதிதாகப் புரட்சி செய்த சீனாவில் இது ஏற்படுவதற்கு இன்னும் எவ்வளவோ காலமாகும். இந்த நிலை ஏற்பட வேண்டுமானல், மின்சாரம், நீராவி, அணுச்சக்தி முதலிய இயற்கைச் சக்திகளின் உதவிகொண்டு தொழில்களெல்லாம் மிக மிக நவீன முறையில் வளர்ந்தோங்க வேண்டும். விளை பொருள்களும், ஆலைப் பொருள்களும் மலை மலையாக உற்பத்தியாகிக் குவியவேண்டும். பொருள்களின் பெருக்கத்தைக் கொண்டுதான் மக்கள் அனைவருக்கும் தேவைக்குத் தகுந்த அளவு பகிர்ந்து அளிக்க முடியும். இந்தியாவில் ஸோஷலிஸத்தைப் பற்றி முன்பு பேசிய காலத்தில், உள்நாட்டு மந்திரியாயிருந்த ஸர்தார் வல்லபாய் பட்டேல், நாம் பொதுவில் பகிர்ந்து கொள்ளக் கூடிய பொருள் வறுமை ஒன்றுதான் இருக்கிறது என்று கூறினர். அபரிமிதமாகப் பொருள்களை உற்பத்தி செய்து குவிக்காமல், ஸோஷலிஸம், கம்யூனிஸம் பற்றிப் பேசுவதில் பயனில்லை. ஆனால் பெரும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்குவதற்கும் ஸோஷலிஸம் அல்லது கம்யூனிஸம் தேவை. முதலாளித்துவ

இ. சீ. பா—10
145