பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 முறை மக்களின் உற்பத்திச் சக்தியை வளரவிடாமல் அடக்கி வைத்திருக்கின்றது. தேங்கிக் கிடக்கும் அந்தச் சக்தியைப் பயன்படுத்திக்கொள்ளக் கம்யூனிஸத்தால்தான் முடியும் என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டியுள்ளார். முதலாளித்துவ முறை தொழில்களை ஒரளவுக்குமேல் வளர்ப்பது அவசியமில்லை. பழைய துருப்பிடித்த கருவிகளைக் கொண்டே முதலாளிகள் பல்லாண்டுகள் உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். எந்தப் பொருளை, எந்த அளவுக்கு உற்பத்தி செய்தால் தங்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்பதே அவர்கள் நோக்கமாயிருக்கும். மக்களின் தேவைகளைப் பற்றியோ, மக்கள் அனைவருடைய ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்வது பற்றியோ அவர்களுக்கு அக்கறை இராது. கம்யூனிஸ்ட் சர்வாதிகார முறையில்தான் பெரிய அளவில் தொழிற்சாலைகளில் உற்பத்திகளைப் பெருக்க முடியும் ; நிலங்களில் விளைபொருள்களைப் பெருக்க முடியும் ; வேலையில்லாமையை நீக்க முடியும்.

இந்த முறையில் கம்யூனிஸ்ட் சீனாவின் முதல் வேலை உயர்தரமான நவீனத் தொழிலுற்பத்தி, நவீன விவசாயம், நவீன விஞ்ஞானம், நவீனக் கலைப்பண்பாடு ஆகியவற்றுடன் நாட்டை ஒரு பெரும் ஸோஷலிஸ்ட்[1] வல்லரசாக அமைத்தல். இரண்டாவது வேலை ஸாேவியத் ரஷ்யாவைத் தலைமையாகக் கொண்ட ஸோஷலிஸ்ட் முகாமில் சேர்ந்திருந்து, அந்த முகாமை வலுப்படுத்தல். மூன்றாவது வேலை அந்நியர் வசமுள்ள சீன


  1. ஸோஷலிஸத்திற்கும் கம்யூனிஸத்திற்கும் முறைகளில் வேற்றுமைகள் இருப்பினும், கம்யூனிஸத்தை ஸோஷலிஸம் என்று கூறுவது உண்டு. ஆனால் ஸோஷலிஸத்தைக் கம்யூனிஸம் என்று கூறுவதில்லை.
146