பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஆதரிக்கிறார்கள். மக்களும் அரசாங்கமும் ஒன்றாகக் கருதக்கூடிய நிலையில் விளங்குகின்றனர்.

புதிய பொருளாதாரம்

சீனவில் 22 மாகாணங்கள் இருக்கின்றன. இவைகளில் ஐந்து சுயாட்சி உள்ளவை. சீனாவின் பரப்பளவு உலகில் 14-இல் ஒரு பங்காகும்; ஜனத்தொகை 65 கோடிக்குமேல் உள்ளது. உழுது பயிரிடக்கூடிய நிலங்கள் 26 கோடி ஏக்கருக்குக் கூடுதலாக இருக்கின்றன.

நாட்டில் எல்லாத் தொழில்களையும், வாணிபத்தையும் ஒரேயடியாகத் தேசிய உடைமைகளாக மாற்றி விடாமல் அரசாங்கமும் தனி மனிதர்களும் சேர்ந்தே நடத்திவர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. நாளடைவில், பல்லாண்டுகளுக்குப்பின், படிப்படியாக எல்லாம் தேசிய மயமாவதே நோக்கம் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆயினும் பல துறைகளில் திடீரென்று பலாத்காரத்தினால் மாற்றங்களும் செய்யப்படுகின்றன.

விவசாயம் கூட்டுப் பண்ணைகளாலேயே நடை பெறுகின்றது. வியாபாரத்திலும் தொழில்களிலும் கூட்டுறவு முறை, அரசாங்க முறை, தனியார் முறை மூன்றும் கலந்திருக்கின்றன. சமீப காலத்தில் தனியார்கள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். எண்ணெய்க் கிணறுகள் முதலியவற்றில் எண்ணெய் எடுப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும், சீனாவும் ஸோவியத் ரஷ்யாவும் சேர்ந்து முதலீடு செய்து பெரிய கூட்டுக் கம்பெனிகளை அமைத்திருக்கின்றன.

148