பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 விவசாயம், தொழில்களின் வளர்ச்சியைப் போலவே அரசாங்க வருமானமும் செலவும் ஆண்டுதோறும் அதிகரித்திருக்கின்றன. 1950-இல் அரசாங்க வருமானம் 652 கோடி யுஆன் நாணயம், செலவு 681 கோடி யுஆன் ; 1958 இல் 4, 186 யுஆன், செலவு 4,096-கோடி யுஆன். தொடக்கத்தில், 1950, 1951-ஆம் ஆண்டுகளில், தேசியப் பாதுகாப்புக்காக அதிகமாய்ச் செலவிடப்பட்டது. அவ்வாண்டுகளில் மொத்தச் செலவில் முறையே 100-க்கு 415, 42. 5 இராணுவச் செலவு. பின்னால் வரவர இச் செலவைக் குறைத்து, தொழில்களுக்கான முதலீடு கூட்டப்பட்டது. 1950-இல் தொழில்களில் முதலீடு செலவில் 100-க்கு 25.5 ; 1958-இல் 64.1.

1949-இலிருந்து மூன்றுவருட காலத்திற்குள் நிலச் சொந்தக்காரர்கள் ஒழிக்கப்பட்டு, நாட்டு நிலங்கள் யாவும் நிலமற்ற 30 கோடி ஏழைக் குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிலங்களோடு வீடுகளும் விவசாயக் கருவிகளும், கால்நடைகளும் அவர்களுக்குக் கிடைத்தன. பின்னர் விவசாயம், கைத் தொழில்கள், ஆலைத்தொழில்கள் ஆகியவற்றில் ஸோஷலிஸ்ட் முறையை விரைவில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1956 முடிவில் 12-கோடிக் குடியானவர் குடும்பங்கள் கூட்டுறவுப் பண்ணைகளில் இணைந்திருந்தன. அவைகளில் 10 கோடிக் குடும்பங்கள் தீவிர உற்பத்திப் பண்ணைகளில் சேர்ந்திருந்தன. கைத் தொழில்கள் செய்து வந்தவர்கள் 60 லட்சம் பேர்களைக்கொண்ட இலட்சம் கூட்டுறவுச் சங்கங்களும் ஏற்பட்டிருந்தன. சிறு வியாபாரிகள் கடைக்காரர்களுடைய வியாபாரமும் 1956-க்குள் கூட்டுறவு முறைக்கு மாற்றப்பட்டது. அதே காலத்தில் 70,000 தனியார் தொழில் நிலையங்கள் அரசாங்கமும் தனியார்

151