பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 களும் கூட்டாக நடத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டு விட்டன. பெரிய, சிறிய, நடுத்தரமான ‘ஷாப்பு’ களில் 19 லட்சம் அரசாங்க வர்த்தகத் துறைக்கு மாற்றப்பட்டும், கூட்டுறவு முறைக்கு மாற்றப்பட்டும், அரசாங்கமும் தனியார்களும் சேர்ந்து நடத்தும் முறைக்கு மாற்றப்பட்டும் தனி முதலாளித்துவப் பிடியிலிருந்து விடுவிக்கப்பெற்றன.

1958-ல் 7, 40,000 கூட்டுறவு விவசாயப் பண்ணைகள் 26, 000 பெரிய ‘கம்யூன்’களாக மாற்றி அமைக்கப்பெற்றன. விவசாயக் குடும்பங்களில் 99 சதவிகிதத்தினர் இவற்றில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டனர். இந்தக் கம்யூன்களில் விவசாய வேலைகளுடன், இரும்பு காய்ச்சுதல், நிலக்கரி எடுத்தல், மின்சார உற்பத்தி, சிமிண்டு உற்பத்தி, செயற்கை உரங்கள் தயாரித்தல், விவசாயக் கருவிகளைத் தயாரித்தல், உணவுப் பொருள் கெடாமல் நீடித்திருக்கும்படி பதனிட்டு வைத்தல் ஆகிய தொழில்களும் மேற்கொள்ளப்பெற்றன. 1959 ஆரம்பத்தில் கம்யூன்கள் நடத்தி வந்த இத்தகைய 7 லட்சம் தொழில் ஸ்தாபனங்கள் 7,100 கோடி யுஆன் பெறுமானமுள்ள பொருள்களை உற்பத்தி செய்ததாகக் கூறப்படுகின்றது. நாட்டின் மொத்தப் பொருள் உற்பத்தியில் இது 10 சத விகிதமாகும்.

கனரகத் தொழில்களை வளர்ப்பதே ஸாேஷலிஸ நிர்மாணத்தின் அடிப்படை என்று அரசாங்கம் அதற்கு முதலிடம் கொடுத்துள்ளது. 1952-58-இல் மொத்தம் அரசாங்க முதலீடாக ஒதுக்கப்பட்ட தொகை 8, 600 கோடி யுஆன். இதில் கனரகத் தொழில்களுக்காக மட்டும் 100-க்கு 43.8 அளிக்கப்பட்டுள்ளது. மற்றைத் தொழில்களுக்கு முதலீடு 7.3% தான். 1950-லிருந்து ஒன்பது வருட காலத்தில் 50,000 தொழிற்சாலைகளும், உலோகங்கள், நிலக்

152