பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வாழ்க்கை எல்லோரையும்விட - எல்லாவற்றையும் விட-தேசத்தின் விவசாயமே முக்கியம் என்று வற்புறுத்தப்பட்டது. ஒழிவு நேரங்களில் மக்களுக்கு இரும்பு காய்ச்சுதல், காகிதம் செய்தல் போன்ற வேறு தொழில்களும் கொடுக்கப்பட்டன. மொத்தத்தில் மக்கள் தங்களுக்கு ஏற்ற தொழில்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்தார்கள். அவர்கள் எப்பொழுது, எதைச் செய்ய வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானித்தது. இலட்சக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாகச் சிதறிப் போயின. கம்யூனிஸம் விரைவில் பரவுவதற்குக் குடும்பங்கள் ஒழிவது தான் நலமென்று தலைவர்கள் தீர்மானித்திருந்தார்கள், அது நிறைவேறிவிட்டது.

ஆனால் கம்யூன்களால் விவசாயப் பொருளுற்பத்தி பெரிய அளவில் விருத்தியாகவில்லை. குடியானவர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு இருந்து கொண்டு உற்பத்தி செய்த அளவு கம்யூன்களால் குறைந்துவிட்டது. உடனே கம்யூன்களின் சட்ட திட்டங்களைத் தளர்த்தி, விவசாயிகள் முந்திய கூட்டுறவு முதலிய முறைகளில் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். விளைபொருள் குறைந்தது என்றால். தொழிற்சாலைகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்களை வயல்களுக்கு விரட்டுவதும், அங்கிருந்து பிறகு ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் விரட்டுவதும் சீனாவில் வழக்கமாகி விட்டது. மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கைப்பாவைகள். அவர்களை எப்படியேனும் ஆட்டிவைக்கலாம் !

கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் இடங்களிலெல்லாம் விவசாயம்தான் விரைவில் விருத்தியாகாமல் முட்டுக் கட்டையாக விளங்குகின்றது. ஸோவியத் ரஷ்யாவைப்போல் சீனாவிலும் விவசாயம் விசேட வளர்ச்சியடைவதற்கு இன்னும் 40 ஆண்டுகள் பயங்கர ஆட்

157