பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சியை அமல் நடத்த வேண்டியிருக்கும் என்று கருதப் படுகின்றது.

பயங்கரமான வறுமை !

1957-இல் ஜனங்களில் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு அரிசி 32 இராத்தலும், இறைச்சி 1½ இராத்தலும், மீன் 1½ இராத்தலும், எண்ணெய் 1 இராத்தலும், சர்க்கரை 22 கிராமும் அரசாங்கத்தால் பங்கிட்டு அளிக்கப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு ‘கம்யூன்கள்’ திட்டம் தொடங்கப்பட்டதால், வீடுகளில் குடும்பங்கள் தனிச் சமையல் செய்வது பெரும்பாலும் தடுக்கப்பட்டது. எல்லோரும் சர்க்கார் நடத்திய உணவு விடுதிகளிலேயே உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் பெற்றனர். 100-க்கு 70 பேர்கள் அப்படி விடுதிகளில் உண்போராயினர். விடுதிகளிலும் முழு ‘ரேஷன்’ படி உணவளிக்கவில்லை; அரை வயிற்றுக்கே அங்கு உணவு கிடைத்துவந்தது. நாளுக்குநாள் உணவுப் பொருள்கள் குறைந்து கம்யூன்களையே மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது ஒரு நபருக்கு மாதத்திற்கு 25 இராத்தல் அரிசிப் பங்கீடு விதிக்கப்பட்டது. இந்த அரிசியிலும் பெரும் பகுதிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு முதலியவைகளையே பெற்றுக்கொள்ள நேர்ந்தது. சீன மக்கள், கம்யூனிஸம் வந்தால் சுபிட்சம் வரும் என்றார்களே ! இதுவரை கிடைத்துவந்த உணவும் இப்பொழுது கிடைக்கவில்லையே! இது என்ன கம்யூனிஸம் ? என்று கேட்கலாயினர். எதிர்த்துப் பேசியவர்களுக்கு வழக்கம் போல் சர்க்கார் தண்டனைகளை மட்டும் விதித்து வந்தது.

1962 மத்தியில் ஷாங்கை முதலிய நகரங்களிலெல்லாம் அரிசித் தட்டுப்பாடு நிலைத்திருந்தது. 25 இராத்தல் அரிசிப்பங்கீட்டில் 10 இராத்தல் அரிசியும்,

158