பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கல்வான் ஆறுகள் ஒடுகின்றன. லடாக்கில் ஏராளமான ஏரிகள் இருக்கின்றன. இவைகளில் அம்டோகார், ஸ்பாங்கூர், பாங்காங், த்ஸொமொராரி முதலிய ஏரிகள் முக்கியமானவை. நாற்பது மைல் நீளமுள்ள பாங்காங் ஏரிதான் மிகப் பெரியது. ஸ்பாங்கூர் ஏரியில் மட்டும் நீர் உவர்ப்பாக உள்ளது.

மலைகளின் இடையேயுள்ள முக்கியமான கணவாய்கள், ஜாரா லா, சார்டிங் லா, லனக் லா, காராடாக் கணவாய், காரகோரம் கணவாய். (இங்கும் மற்ற இமயமலைப் பிரதேசங்களிலும் லா என்று முடியும் பெயர்கள் கணவாய்களைக் குறிக்கும்.)

லடாக் ஜில்லாவில் லடாக், கார்கில், ஸ்கார்டு என்ற மூன்று தாலுகாக்கள் இருக்கின்றன. கிழக்குக்கோடியிலுள்ள லடாக் தாலுகா மட்டுமே 29,848 சதுரமைல் பரப்புள்ளது; இதன் ஜனத்தொகை 25,000. இதில் 110 கிராமங்கள் இருக்கின்றன. வடக்கிலிருந்து தெற்குவரை இதில் சோடா சமவெளி, அக்ஸாய் சின் என்ற வெண்பாலைவனம், லிங்க்ஸி டாங், சாங் சென்மோ பள்ளத்தாக்கு ஆகியவை அடங்கியுள்ளன. லிங்க்ஸி டாங், அக்ஸாய் சின் இரு பகுதிகளும் வனந்தரங்கள். புல் பூண்டுகளைக் கூட அங்கே காண்பதரிது.

லடாக் ஜில்லாவைப் பற்றியும், லடாக் தாலுாகாவைப் பற்றியும் நாம் விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இந்தப் பகுதியில், முக்கியமாக லடாக் தாலூகாவின் பெரும் பகுதியைத் தான் தனக்குரியது என்று சீன சென்ற சில ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றது.

லடாக்கின் தட்ப வெப்பநிலை மனிதரைக் காட்டிலும் விலங்கினங்களுக்கே ஏற்றதாகும். பகலில் சூடு அதிகம், இரவில் குளிர் அதிகம், மழையும் சொற்பம். அடிக்கடி உறைபனி பெய்வதுடன், வரட்சியான

13