பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 மற்ற வெளி நாட்டார்களையும் கூட்டம் கூட்டமாக வதைத்த ஹிட்லர் காலம்வரை இந்த அளவுக்குக் கொலைகளும் கொடுமைகளும் நடக்கவில்லை. 1949இலிருந்து 1956-க்குள் சுமார் 200 லட்சம் சீன மக்கள் வதைக்கப்பட்டிருக்கிறார்கள். 230இலட்சம் மக்கள் கட்டாயவேலை செய்யும்படி சிறை முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் பாதுகாப்புப் போலீஸின் கொடுமைகள் இரசியமாகச் செய்து முடிக்கப்பெற்றன. சீனாவிலோ எல்லாம் அம்பலத்தில் செய்யப்படுகின்றன. விசாரணைகள் விளையாட்டு மைதானங்களில், மக்கள் கூட்டத்தின் நடுவிலேயே, நடைபெறுகின்றன. கைதிகளைச் சுட்டுத்தள்ளுவதும் கூட்டங்களின் முன்னிலையில்தான்; சீனக் கம்யூனிஸ்டுகள் தங்கள் பயங்கரத் தண்டனைகளை நாடும் நகரும் நன்கறிய வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களாம்!

ஜனங்களை வேவு பார்க்க ஊர் ஊராக, பட்டி தொட்டிகளிலேகூட, இரகசியப்பாதுகாப்புப் போலீஸ் படை அமைக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி வீடுகளுக்குள் திடீரென்று புகுந்து பார்க்கத் தனியாகப் போலீஸ்காரர் இருக்கின்றனர். எந்த நேரத்திலும், எந்த வீட்டிலும், அவர்கள் போய் அடைத்திருந்த கதவைத் தட்டுவார்கள். அவர்களைக் கண்டாலே மக்களுக்குக் கதிகலக்கம்தான்!

ஆயுதம் தாங்கிய போலீஸ் படையில் 7 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்தப் படைக்குத் தலைவராயிருந்து, ஆறு ஆண்டுகளில் சீன முழுதுமே கிடுகிடுத்து நடுங்கும்படி கொடுமைகள் புரிந்து, 1955-க்குள் மக்களை அடக்கி ஒடுக்கி வெற்றி கண்ட வீரர் லோ ஜூயி சிங் என்பவர். மிராசுதார்களைத் தீர்த்துக்கட்ட வேண்

160