பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 டுமா, கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களை ஒழிக்கவேண்டுமா, எழுத்தாளர்கள், படிப்பாளிகளை மட்டம் தட்ட வேண்டுமா? எதற்கும் அவர் திறமையுடன் சீர்திருத்தி அமைத்திருக்கும் போலீஸ்படை தயார்! அப்படைக்கு உளவறிந்து கூறும் பிரிவினர், ஜனங்களில் ஒவ்வொருவருடைய சரித்திரம் மட்டுமின்றி, வமிச வரலாறுகளையும் குறித்து வைத்திருக்கின்றனராம். ஆகவே கோடிக்கணக்கான சீன மக்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் மோகம் கொண்டு மட்டும் அடிபணியவில்லை என்றும், பயங்கரத்திற்கும், பயங்கர ஆட்சி முறைக்குமே அடிபணிந்துவிட்டார்கள் என்றும் கருதவேண்டி யிருக்கிறது.

கம்யூனிஸ்ட் ஆட்சியை நிலை நிறுத்தவும், கம்யூனிஸ்ட் திட்டங்களை நிறைவேற்றவும் சீனாவில் முதன்மையாயுள்ளவர்கள் நான்கு கூட்டத்தினர். முதற் பிரிவிலுள்ளவர்கள் ‘கான்பூக்கள்’ என்ற தொண்டர் படையினர். இவர்களே ஆயிரக் கணக்கில் கிராமங்களிலெல்லாம் பரவி, கட்சிப் பிரசாரம் செய்து, காரியங்களை நிறைவேற்றுபவர்கள். இரண்டாவது போலீஸ் படை. அடுத்த கூட்டம் இராணுவம்— ‘மக்களின் விடு தலைப்படை’ என்று சொல்லப்பெறும் செஞ்சேனை. நான்காவது கூட்டத்தார் 43 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சிக்குத் தலைமை வகித்துவரும் வயோதிகர்களான தலைமைக் குழுவினர். இந்த நான்கு கூட்டங்களிலும் எது உலைந்தாலும், இப்போதைய சீன சமுதாயக் கட்டுக் கோப்பே உலைந்துவிடும். இவை அவ்வளவு முக்கியமானவை. மக்கள் நிரந்தரமாக ஒடுக்கப்பட்டிருப்பதால் கான்பூக்களுக்கோ, .பாேலீஸ் படைக்கோ, செஞ்சேனைக்கோ, தலைமைக் குழுவுக்கோ சமீப எதிர்காலத்தில் உள்நாட்டில் பலமான எதிர்ப்பு எதுவும் ஏற்பட முடியாது. வெளிநாடுகளின் விவ

இ. சீ. பா.—11
161