பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 காரங்களில் சீனா சிக்கிக்கொள்வதில் பெரும் போராட்டங்கள் தோன்றினால், அல்லது மூன்றாவது உலகப் போர் ஏற்பட்டால், சீனாவில் அடிப்படையான மாறுதல்கள் ஏற்படலாம். ஆனால் அணுகுண்டுகளினாலும், ஏவுகணைகளாலும் ஏற்படக்கூடிய அழிவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அஞ்சுவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் ரஷ்யாவுமே அத்தகைய போரின் கொடுமைக்கு அஞ்சிய போதிலும், சீனத் தலைவர்கள் மட்டும் போர் மனப்பான்மையுடனேயே ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். உலகப்போரினால் எந்தெந்த நாடுகள் அழிந்தாலும், சீனாவில் பாதி ஜனத்தொகைக்குமேல் அழிந்தாலும், 30 கோடிச் சீனர்களாவது எஞ்சியிருப்பார்கள் என்றும், அவர்கள் மீண்டும் உலகத் தலைமையை அடைந்து விடுவார்கள் என்றும் அத்தலைவர்கள் வெளிப்படையாகப் பிதற்றி வருகின்றனர்.

வெளிநாடுகளுடன் தொடர்புகள்

சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை அதன் உள்நாட்டுக் கொள்கையின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளது. ஸோவியத் ரஷ்யாவுடன் அதற்கு மிக நெருங்கிய உறவு இருந்ததால், தொழில், இராணுவம் முதலிய துறைகளில் அதற்கு ரஷ்யா பேருதவிகள் செய்து வந்தது. ரஷ்யாவைத் தலைமையாகக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் சீனா இணைந்து நின்றது. 1950-இல் சீன ஏற்றுமதியில் 100-க்கு 70 ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது. ஸோவியத் நாட்டின் புகழ்பாடுதல் சீனாவில் தினசரி நிகழ்ச்சியாயிற்று. ஆயிரக்கணக்கான ரஷ்ய நிபுணர்கள், சீனாவில் நெடுநாள் தங்கியிருந்து, கனரகத் தொழில்களே அங்கே நடத்த வழி வகுத்துக் கொடுத்தனர். நாடு முழுதும் சீன—

162