பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ரஷ்ய நட்புறவுச் சங்கங்கள் பல இயங்கிவந்தன. சீன மாணவ மாணவிகள் ரஷ்ய மொழியையும் கற்க வேண்டுமென்று விதி செய்யப்பட்டது.

ஆயினும் சீன மக்களுக்கு ரஷ்யர்களிடம் அபாரமான மோகம் கிடையாது. தொன்று தொட்டே சீனவின் சுதந்தரத்திற்கு ரஷ்யா முக்கியமான அபாயமாயிருந்து வருவதை அவர்கள் மறப்பதில்லை. ஸ்டாலின் காலத்திலிருந்தே அவருக்கும் மாஸே - துங்குக்கும் பல கருத்து வேற்றுமைகள் இருந்து வந்தன. பின்பு ரஷ்யத் தலைவர் குருஷ்சேவுக்கும் மா - வுக்கும் கருத்து வேற்றுமைகள் இருந்ததோடு, அவைகளைப் பற்றி வெளிப்படையாகப் பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், ஒலிபரப்புக்களிலும் விவாதமும் நடந்து வந்தது. மற்றாெரு புறத்தில், உலகத்தில் முதலாவது ஸாேஷலிஸ்ட் நாடு என்பதாலும், விஞ்ஞானத்திலும், இராணுவ வல்லமையிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் போட்டியிடும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது என்பதாலும், ரஷ்யாவிடம் சீனாவுக்கு மிகுந்த நேசமும் நம்பிக்கையும் இருந்து வந்தன.

ரஷ்யாவிடம் எவ்வளவு நேசம் இருந்ததோ, அதே அளவுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சீனா துவேஷிக்கின்றது. நல்லதற்கெல்லாம் பிறப்பிடம் ரஷ்யா, தீயதற்கெல்லாம் பிறப்பிடம் அமெரிக்கா என்று அது கருதி வந்தது. ‘சீன மக்களின் எதிரி அமெரிக்கா, ஏகாதிபத்தியச் சுரண்டல் கும்பலுக்குத் தலைமைப் பீடம் அமெரிக்கா, பிற்போக்காளரின் கோட்டை அமெரிக்கா, அழுகிப்போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் சின்னம் அமெரிக்கா’ என்றெல்லாம் மக்களிடையே அது இடைவிடாமல் பிரசாரம் செய்கின்றது. அமெரிக்கா வெறும் அட்டைப் புலி, அதை முறியடிப்பது எளிது என்று மக்கள் நம்பும்

163