பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 படி சொல்லப்படுகின்றது. குழந்தைகளும், இளைஞர்களும் அமெரிக்காவை வெறுக்கும்படி கற்பிக்கப்படுகின்றனர். இதே அமெரிக்காவின் ஆயுதங்கள், பணம் முதலிய உதவிகளைக் கொண்டுதான் சீனா ஜப்பானை எதிர்த்துப் போராடித் தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் அது பழங்கதை.

ஆதிக்கிய வேட்டை

மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா மூன்று பிரதேசங்களிலும் கம்யூனிஸ்ட் சீனா ஆரம்பம் முதலே ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டு விளங்குகின்றது. பல நூற்றாண்டுகளாகச் சீனச்சக்கரவர்த்திகள் கொண்டிருந்த ஏகாதிபத்திய ஆசையை நவீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கமும் தன் கொள்கையாகக் கொண்டுவிட்டது. சிங்கியாங் மாகாணத்தின் பாலைவனத்தையும், இமயமலைத் தொடர்களையும் முற்காலத்தில் தாண்டிவர முடியாமலிருந்தது. ஆனால் இப்பொழுது சீனர்கள் அவைகளையும் தாண்டிவிட்டனர். ஸாேவியத் ரஷ்யா புரட்சியில் வெற்றி பெற்றவுடன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுற்றியிருந்த எல்லைப்புற நாடுகளுக்கு விடுதலையளித்தனர். ஆனால் மாஸே–துங், வெற்றி கிட்டியதும், சுற்றியுள்ள நாடுகளை வளைத்துப் பிடித்துக் கொள்ளவே முற்பட்டுள்ளார்!

சீனா திபேத்தை அடிமைப்படுத்தியது ஒரு தனி நிகழ்ச்சியன்று. மேலும் பல நாடுகளைப் பிடிக்க அது ஒரு படியேயாகும். பழங்காலத்திலிருந்தே பர்மாவைக் கட்டாயப்படுத்திச் சீனா கப்பம் பெற்று வந்தது. 18-ஆம் நூற்றாண்டில் பர்மா சீனச் சக்கரவர்த்தியை முறியடித்த பிறகுதான், கப்பம் கட்டுவது நின்றது. மீண்டும் பர்மாவின் மீது கம்யூனிஸ்ட் சீனாவின் பார்வை விழுந்துகொண்டேயிருக்கின்றது. வியட்னாமும் பர்மா

164