பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 நாம் வெற்றியடையவும், அவ்வெற்றியை நிலை நிறுத்திக்கொள்ளவும் ஒரு பக்கத்தில் சார்ந்திருக்கவேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன. சீன மக்கள் ஏகாதிபத்தியத்தின் பக்கத்திலோ, ஸோஷலிஸத்தின் பக்கத்திலோ, ஏதாவது ஒரே பக்கத்தில் சேரவேண்டும் என்பதே அனுபவங்களிலிருந்து தெரிகின்றது. இரு பக்கத்திலும் இறங்காமல், மதில்மேல் அமர்ந்திருக்க முடியாது; மூன்றாவது பாதை இல்லை. நடுநிலைமை என்பது ஏமாற்று, மூன்றாவது பாதையே கிடையாது.’ இவ்வாறு கூறி, சீன ஸோஷலிஸத்தின் சார்பில் நிற்க வேண்டுமென்று மாஸே-துங் ஆதியிலேயே வழி வகுத்தார். ஸாேஷலிஸத்துடன் நாடு முழுதும் ஒரு தேசிய வெறியும் எழுப்பப்பெற்றுள்ளது. ‘நம் நாடு, நமது செல்வாக்கு, நம் ஆதிக்கியம்’ என்ற முறையில் மக்களின் குறுகிய தேசபக்தி வளர்க்கப் பெற்றிருக்கின்றது. அத்துடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீன நாட்டின் பழம் பெரும் தத்துவங்களிலும் தேர்ச்சி பெற்று அவற்றையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சர்வாதிகாரம் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரமாக மட்டும் இருக்கவில்லை. பழைய சீனச் சக்கர வர்த்திகளின் எதேச்சாதிகார முறைகள், கன்பூஷியஸ் போன்ற சில சீன ஞானிகளின் போதனைகள் எல்லாம் அவர்களுக்கு உரமளித்திருக்கின்றன. இவை சீன வெளிநாட்டுக் கொள்கைகளிலும் இடம் பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் பிரசாரம்

சீன வரலாற்றில் 4,000 ஆண்டுகளுக்கு இடையில் எக்காலத்திலும் இல்லாத முறையில், இப்போது கம்யூனிஸ்ட் சீன உலகில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றது. ஆசியா, ஆப்பிரிகா, தென்

166