பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கட்டடங்கள். பூந்தோட்டங்கள் முதலியவற்றுடன், கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றது. முற்காலத்தில் குவிந்து கிடந்த அசுத்தங்களெல்லாம் அகற்றப்பட்டு, நகரம் புதுமைப் பொலிவோடு விளங்குகின்றது. கோட்டைச் சுவர்களைத் துளைத்துப் புதுப் புதுச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல புதிய தொழிற்சாலைகளும் அங்கே அமைந்துள்ளன. மேலும் பீகிங் நகரே என்றும் சீனக் கலாசாரத்தின் வளர்ப்புப் பண்ணையாகும். புதிய சீனாவின் பெருமைகளைக் காணத்தக்க பெருங்காட்சிச் சாலையாகவும் இப்போது அது விளங்குகின்றது. பீகிங் நகர் எவர் வசம் உளதோ அவர் வசமே சீனாவும் இருக்கும். ‘உலகிலேயே இரண்டு நகரங்கள்தாம் உண்டு. ஒன்று பாரிஸ், மற்றது. பீகிங்’ என்று பீகிங்கில் வசித்த ஒரு பிரெஞ்சுக்காரர் புகழ்ந்துள்ளார்.

இவற்றை யெல்லாம் பார்த்துவிட்டுப் போகும் வெளி நாட்டார்கள், தத்தம் நாடுகளில் சீனா வைப் பற்றியும், கம்யூனிஸ்ட் ஆட்சியைப் பற்றியும் புகழ்ந்து பேசிக் கம்யூனிஸ்ட் சீனவுக்காகச் சம்பளமில்லாத பிரசாரகர்களாக விளங்குகிறார்கள். மூன்று அல்லது ஆறு வாரங்கள் சீனாவைச் சுற்றிப் பார்ப்பவர்களே உற்சாகமாக அதன் புகழ் பாடுகிறார்கள் என்றால், வெளிநாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வோர் ஆண்டிலும் பீகிங்கில் நடைபெறும் அக்டோபர் புரட்சியின் ஆண்டு விழாவுக்கு 75 நாடுகளிலிருந்து 3,500 பிரதிநிதிகள் செல்கின்றனர். 1959-இல் ஆப்பிரிக, ஆசிய நாடுகளிலிருந்து 38 குழுவினரும், வட அமெரிக்காவிலிருந்து 20 குழு வினரும், 19 மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 10 குழுவினரும், நியூசிலந்திலிருந்து 4 குழுவினரும் சீனாவைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தார்களாம்.

168