பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 அசலுக்கும் குறைத்து விற்பதாகத் தெரிகிறது. முதலில் எப்படியாவது வாங்குவோர் தொகை பெருகட்டும் என்று அது கருதியிருக்கலாம். மேலும் அசல் விலையைக் கணக்கிடுவதிலும் உற்பத்திச் செலவைக் குறைத்துக் கணக்கிட்டுக் கொள்கின்றது. எகிப்தில் லட்சக் கணக்கில் சீனப் ‘பெளண்டன்’ பேனாக்கள் விலையாகின்றன. ஒன்றின் விலை ரூ. 7. கெய்ரோ தலை நகரத்து வியாபாரி ஒருவர் மட்டும் வருடத்திற்குப் பத்து லட்சம் பேனாக்கள் வரவழைத்து விற்கிறாராம். அங்கு இந்திய சைக்கிளின் விலையில் பாதி விலைக்குச் சீன சைக்கிள்கள் விற்பனையாகின்றன. காலால் மிதித்து ஒட்டும் சீனத் தையல் மிஷின் ரூ. 50-க்குக் கிடைக்கின்றது. சில நாடுகளுக்குச் சீன அரிசி முதலிய உணவுப் பொருள்களையும் ஏற்றுமதி செய்கின்றது. பர்மாவில் அரிசி வாங்கி, கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்டு நாடுகளுக்கு அதை விற்று விடுகின்றது. வர்த்தகத்திலும் சீனா தன் அரசியல் கொள்கைக்கு ஆதரவு தேடிக்கொள்கின்றது.

புத்தகங்கள், பத்திரிகைகள், நிருபர்கள்

அடுத்தாற்போல் கவனத்துக்குரிய விஷயம் சீனாவின் பிரசாரம். பல மொழிகளில் புத்தகங்கள், சிறு பிரசுரங்கள், பத்திரிகைகள் முதலியவற்றை மிக நேர்த்தியான முறையில் தயாரித்து அது வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றது. அச்சுக் கலைக்கே தாயகம் சீனா. கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்கள் வரைவதில் சீனக் கலைஞர்கள் எக்காலத்திலுமே சிறந்து விளங்கியவர்கள். நல்ல படங்கள், புகைப் படங்கள் முதலியவற்றுடன் வெளிவரும் மலிவான சினப் பிரசுரங்கள் பல நாடுகளிலும் வெள்ளமாகப்

170