பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 பட்டன. பெரிய உலகப் போரில் சீனப்படை எப்படிப் போரிடும் என்பதும், எவ்வளவு தாக்குப் பிடிக்கும் என்பதும் அனுபவத்திலேதான் தெரியும்.

கம்யூனிஸ்ட் கட்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1,70,00,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜனத்தொகையில் இந்த எண்ணிக்கை சிறு பகுதிதான். 39 பேர்களில் ஒருவரே கட்சி உறுப்பினர் எனினும் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் சீனக் கட்சியே அளவில் பெரியது. அங்கத்தினர்களைச் சேர்த்தல் இடையிடையே நிறுத்தி வைக்கப் படுகின்றது. முன்சேர்ந்த அங்கத்தினர்களை முறைப்படுத்தி, அவர்களுக்குப் பயிற்சியளித்துக் கட்சியை நன்கு கண்காணித்துக் காப்பதற்காகவே இவ்வாறு நிறுத்தி வைத்தல் வழக்கமாயுள்ளது. அரசாங்கம் கட்சிக்கு அடக்கம்; அதுபோல் நாட்டின் எல்லாத் துறைகளிலும் கட்சியின் ஆதிக்கியம் பரவி நிற்கின்றது.

ரேடியோ, பத்திரிகைகள், பிரசுரங்கள் எல்லாம் கட்சியின் மேற்பார்வையிலேயே நடந்து வருகின்றன. அறிவாளிகள், படிப்பாளிகள், கலைஞர்கள் பலர் கட்சியில் சேராமல் விலகியிருப்பதைக் குறைத்து, அவர்களை அதிகமாய்ச் சேர்க்கவும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் கட்சித் தலைமைக் குழுவில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வது போலில்லாமல், சீனாவில் ஒரே தலைமைக் குழு 28 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றது. ஆதிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் இப்பொழுதும் உயர்ந்த மரியாதைக் குரியவர்களாகவே விளங்குகின்றனர்.

2,000 ஆண்டுகளாகச் சீன மக்கள் கன்பூஷியஸ்

174