பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 வஞ்சனே, கொலை ஆகியவையே அறிவின் எல்லைகள், புதிய மனித தர்மத்தின் சிகரங்கள் !

சீன-ஜப்பான் யுத்தத்தில் சீன வாலிபர் படையைச் சேர்ந்த ஒர் இளைஞனை ஜப்பானியர் பிடித்து, அவனையும் ஒரு கிராமாதிகாரியையும் சேர்த்துக் காவலில் வைத்தனர். காவற்கூடத்திற்கு வெளியில் ஜப்பானியரின் கையாளான ஒரு சீனச் சிப்பாய் காவல் காத்து நின்றான். இளைஞன், இரவு நேரத்தில் காவற்காரன் உறங்கி விழுவதைக் கண்டு, தன் கூட இருந்த கிராமாதிகாரி தப்பியோடும்படி வழி செய்தான். ஆனால் அவருடன் தான் ஒடவில்லை. நேராகக் காவற்காரனிடம் போய் அவனை எழுப்பினான். கிராமாதிகாரி தப்பியோடிவிட்டதை அறிவித்தான். ‘இனி உன் பாடு அதோ கதிதான் ! காலையில் ஜப்பானியர்க்கு என்ன பதில் சொல்லுவாய் ? இருக்கிற நிலையில் நீயும் என்னுடன் ஒடி வந்து விடுவதுதான் நலம் வெளியே போய்க் கம்யூனிஸ்ட் படையில் நீயும் சேர்ந்து கொள்ளலாம் !’ என்றான். வேறு வழியில்லே. காவற்காரனும் இசைந்து கிளம்பிவிட்டான். அப்போது இளைஞன், நமக்கு முக்கியமான பொருள் துப்பாக்கி ! அதையும் எடுத்துக்கொண்டு வா ! என்று ஆலோசனை கூறினான். பிறகு காவற்கூடமே காலியாகிவிட்டது.

இந்த இளைஞன் உற்சாகத்தில் இப்படியெல்லாம் செய்திருக்கலாம். ஆனால் இதே போன்ற தந்திரங்களையே அரசியல் தர்மமாகப் பின்பற்றினால், நேபாவிலும், லடாக்கிலும், டில்லியிலும், லண்டனிலும், மாஸ்கோவிலும்-எங்கும் இவைகளையே பின்பற்றினால், சீனக் கம்யூனிஸ்டுகளே யார்தாம் நம்பப் போகின்றனர்? எவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும், துப்பாக்கிக் குழாயையே நம்பி யிருக்கும்படி மாஸே-துங் போதித்துள்ளார்.

இ. சீ. பா.—12
177