பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தலைவர் மாஸே-துங்

தலைவர் மாஸே - துங் 1893-இல் ஹூனன் மாகாணத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றாேர்கள் வாழ்க்கை வசதிகளெல்லாம் பெற்றிருந்தனர். ஆயினும் மா - சிறுவயதில் படிக்க மனமில்லாமல் பள்ளியை விட்டு ஓடிவந்துவிட்டார். அவருடைய பதினான்காவது வயதில் இருபது வயதுள்ள பெண் ஒருத்தி அவருக்கு மணம் செய்து வைக்கப்பெற்றாள். ஆனால் அவர் அவளுடன் வாழ மறுத்துவிட்டார். பின்னால் 1920-இல் பீகிங் சர்வகலாசாலைப் பேராசிரியர் ஒருவருடைய மகளான யாங் கை-ஹூயி என்ற பெண்ணை அவர் இரண்டாம் முறையாக விவாகம் செய்து கொண்டார். அவளைக் கோமிண்டாங் அரசாங்கம் கொலை செய்துவிட்டபின், அவர் முதலில் ஒரு மாணவியையும், பின்னர் ஒரு சினிமா நடிகையையும் மணந்து கொண்டார்.

இளமையில் அவர் பல சமயங்களில் தம் அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொண்டு வந்தார். ஆனால் 1920 முதல் கம்யூனிஸமே பூரணமான புரட்சித் தன்மை வாய்ந்தது என்று அதிலேயே உறுதி கொண்டுள்ளார்.

அவருடைய நெடிய உருவமும், உருண்ட தோள்களும், இருபுறமும் தொங்கிக் கொண்டிருக்கும் நீண்ட கைகளும், பருத்த தலையும், சிறிய கண்களும் அவர் எத்தனை பேர் மத்தியிலிருந்தாலும் அவரை அடையாளம் தெரிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்றன. ஆனால் குரல் மட்டும், பெரிய உடலுக்கு ஏற்றட்டி கம்பீரமாயில்லாமல், கீச்சுக்குரலாக உள்ளது என்று நேரில் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

மா - படைகளைத் தலைமை வகித்து நடத்தியிருக்கிறார், கொரில்லாப் போர் முறையில் அவர் தேர்ந்த

178