பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 எல்லையின் நீளம் 1,100 மைல். இதில் பெரும்பகுதி லடாக் ஜில்லாவை ஒட்டியிருக்கின்றது. சிங்கியாங் கின் தென் எல்லை ஆறாம் நூற்றாண்டிலிருந்து இதுவரை எக்காலத்திலும் க்யூன் லுன் மலைத் தொடர்களுக்குத் தெற்கே இருந்ததில்லை. லடாக்குக்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையில் முக்கியமான இடங்கள் பலவும் பத்தாம் நூற்ருண்டிலிருந்து இதுவரை ஒரே நிலையில் இருந்து வந்திருக்கின்றன. எனவே அக்ஸாய் சின் பீடபூமியும், லிங்க்ஸி டாங் சமவெளிகளும் ஒரு காலத்திலும் சீன ராஜ்யத்தில் சேர்ந்திருக்கவில்லை. இங்குக் குறிக்கப் பட்டிருக்கும் எல்லைகளுக்கு ஆதரவான தஸ்தாவேஜுகளும், வெளிநாடுகளில் வழங்கும் தேசப் படங்களும், சீனவே முன்பு தயாரித்த படங்களும் ஏராளமாக இந்திய அரசாங்கத்திடம் உள்ளன. அவைகளெல்லாம் 1960-இல் சீன அதிகாரிகளிடம் காட்டி விவாதிக்கப் பெற்றுள்ளன. இப்போது சீன உரிமை கொண்டாடும் பிரதேசங்களை லடாக்கில் வாழும் மக்களே உபயோகித்து வந்திருக்கிறார்கள்; அவைகளில் லடாக்-காஷ்மீர் அரசாங்கமே ஆட்சி புரிந்து வந்திருக்கிறது. அவைகளில் நிலத்தீர்வைகள் விதித்ததற்கும், வசூல் செய்ததற்கும் தொடர்ச்சியான ரசீதுகள் முதலிய ஆதாரங்களுள்ளன. அவைகளில் அமைந்திருந்த வர்த்தக மார்க்கங்கள் அனைத்தையும் காஷ்மீர் அரசாங்கமே நிர்வகித்து வந்திருக்கின்றது.

மேற்கூறிய எல்லைகள் 1842-இல் சம்பந்தப்பட்ட மூன்று நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்த மூலம் உறுதி செய்யப்பெற்றுள்ளன. அப்பொழுது, சீனச் சக்கரவர்த்தியின் பிரதிநிதிகளும், காஷ்மீரின் பிரதிநிதிகளும், திபேத்து நாட்டின் மதத் தலைவராகவும் அரசாங்கத் தலைவராகவும் விளங்கிய தலாய் லாமாவின்

15