பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உதராணமாக ரஷ்யத் தலைவர் ஸ்டாலினையே குறிப்பிடலாம். சாகும்வரை ஒவ்வொரு விஷயத்திலும், அவர் சர்வாதிகாரியாகவே விளங்கினார். உள்நாட்டில் அவர் எந்தத் தலைவரையும் ஒரளவுக்குமேல் வளர விடவில்லை. சகல அதிகாரிகளையும், அதிகாரங்களையும் தன் கைக்குள்ளேயே வைத்திருந்தார். இராணுவத்திற்கும் தானே தலைவர் என்று கூறிக் கொண்டு மார்ஷலாக விளங்கினர். அப்போது பெரும் புகழ் பெற்ற ஸோவியத் தளபதிகள் கூடத் தம் கருத்துக்களை வெளியிட அனுமதி கிடையாது. ஸ்டாலினுக்கு மேலாக ராணுவ விஷயங்களில் அபிப்பிராயம் கூற யாரால் முடியும் என்றே பேசப்பட்டு வந்தது. இதனால் தளபதிகளும், சேனையின் தலைமைக் காரியாலய அதிகாரிகளும் ஸ்டாலின் இருக்கும்வரை ராணுவ விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்வதையே விட்டுவிட்டனர். ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகுதான் தளபதிகளின் அபிப்பிராயங்கள் ரஷ்யாவில் வெளிவருகின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களான மாஸே-துங், சூ என்-லாய், சூதேஹ், லியு ஷெள-சி முதலியோரும் தீவிரப் புரட்சிக்காரர்களாகவே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள். கம்யூனிஸத்தைப் பிரசாரம் செய்ததால்தான் நாடுமுழுவதையும் அவர்கள் தங்கள் ஆதிக்கியத்தில் கொண்டுவருவது எளிதாயிற்று. வெறும் இராணுவப் போராட்டங்களால் மட்டும் இது முடிந்திராது. ஆனால் அவர்கள் ஆட்சிப்பீடங்களில் அமர்ந்த பிறகு எப்படிக் காட்சியளிக்கிறார்கள்? கார்ல் மார்க்ஸ் கூறியுள்ள கம்யூனிஸத்தின் தலைவர்களாகவா விளங்குகிறார்கள் ? பழைய சீன ஏகாதிபத்தியவாதிகளாக அல்லவா விளங்குகிறார்கள்! நாடு பிடிக்கும் வேட்டையில் இறங்கிவிட்டார்கள் ! அண்டை அயல் நாடுகளில் எவ்வளவு பகுதிகளைச் சீனாவுடன் சேர்த்துக் கொள்ள

180