பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெற்றிருந்த போதிலும், அதற்கு ஸோவியத் ரஷ்யாவின் உதவி தொடர்ந்தும் தேவையாக இருக்கின்றது. சீனா போரில் இறங்கினால், எண்ணெய் ரஷ்யாவிலிருந்து கிடைத்து வரவேண்டும். இயந்திர சாதனங்களையும் விமானங்களையும் சில வாரங்கள் பயன் படுத்தியவுடன், பழுதுபோன பாகங்களை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு ரஷ்யாவின் உதவி வேண்டும். ‘சீன இராணுவத்தின் நாபிக் கொடி ரஷ்யத் தாயோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது’ என்று ஒரு சீன அரசியல் நிபுணர் கூறியுள்ளார். சீனத் தரைப்படைகள் சுற்றியுள்ள நாடுகளில் அட்டகாசம் செய்ய முடியுமேயன்றி, வெளியிலிருந்து சீனா மீது சாதாரண நாடு ஒன்று படையெடுத்தாலும், சீனா ஸோவியத் உதவியில்லாமல் எதிர்த்து வெல்ல முடியாது. மேற்கொண்டு தேவையான போர் விமானங்களையும், தளவாடங்களையும் சீனா தானே தயாரித்துக் கொள்ளும்வரை இந்தச் சார்பு அவசியமாகும்.

சீனாவின் தொழில் வளர்ச்சிக்காக ரஷ்யா ஏராளமாகப் பொருள் கொடுத்து உதவியதுடன், தேர்ந்த தொழில் நிபுணர்களையும் அனுப்பிவைத்தது. 1956 வரை ரஷ்யா கடனாகக் கொடுத்தது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகும். பின்னாலும் உதவியளித்துள்ளது. புதிய ரயில்பாதைகள் அமைத்ததிலும் ரஷ்யா பெரும் பங்கெடுத்துக் கொண்டது. இத்தகைய உதவிகளால் பொருளாதாரத் துறையிலும் சீனா ரஷ்யாவுடன் பிணைக்கப் பட்டிருக்கின்றது. ஐந்தாண்டுத் திட்டங்களின்படி சீனாவில் அமைக்கப்படும் பெருந்தொழிற் சாலைகளும், ரயில் பாதைகளும் ரஷ்யாவின் எல்லையை ஒட்டியிருக்கும் ஸிங்கியாங், வடக்கு மஞ்சூரியா, உள் மங்கோலியா மாகாணங்களிலேயே அதிகமாயுள்ளன. இந்த மாகாணங்களை அடுத்திருக்கும் தன் பிரதேசமான

183