பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 சைபீரியாவில் ரஷ்யாவும் பெருந் தொழில்களையும், ரயில் பாதைகளையும் அமைத்துக்கொண்டிருக்கின்றது. ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நேரடியான தொடர்பு அமைந்துள்ளது. இந்த விஷயங்களை அரசியல் நிபுணர்கள் மிகவும் கவனிக்கிறார்கள்.

இராணுவத்தின் பயிற்சிக்கும், கனரகத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், சீனர்களுக்குத் தொழிற் பயிற்சியளிப்பதற்கும் பல்லாயிரம் ஸோவியத் நிபுணர்கள் சீனாவுக்கு வரவழைக்கப் பெற்றனர் என்றாலும், சீன அரசாங்கத்திற்கோ, அல்லது அதன் வெளிநாட்டு இலாகாவுக்கோ ஆலோசனை கூற ரஷ்யர் அழைக்கப்பெறவில்லை. தவிரவும் இராணுவத்திற்குப் பயிற்சியளித்ததோடும், தொழில்களில் பயிற்சியளித்த தோடும் ரஷ்ய நிபுணர்களின் வேலை முடிந்தது. நாட்டின் அரசியலில் அவர்கள் நுழைய மாஸே-துங் விடவில்லை. இராணுவத் தலைமைக் குழுவினரின் மந்திரா லோசனைகள் சீனர்களுக்குள் இரகசியமாக நடந் தனவேயன்றி, அவற்றிலும் ரஷ்ய நிபுணர்களுக்கு இடமில்லை.

விவசாய விருத்திக்குச் செலவிட வேண்டியதைச் சுருக்கியே சீனா தொழில்களில் ஏராளமாக மூலதனம் போடவேண்டியிருக்கின்றது. அத்துடன் விவசாய விளைபொருள்களை ஸோவியத் தலைமையிலுள்ள கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வேறு பொருள்களை அது இறக்குமதி செய்கிறது. இவ்வாறு இரண்டு பொறுப்புக்களையும் விவசாயம் நெடுங்காலம் தாங்கியிருக்க முடியாது. விவசாயமும் தொழில்களும் போதிய அளவு முன்னேறுவதற்குச் சீனாவுக்கு ஸோவியத் முகாமிலிருந்து பெருவாரியான பொருளுதவி தேவையாகும். ஸோவியத் ரஷ்யாவும் விளைபொருள்களையே அதிகமாக ஏற்றுமதி செய்து, சீனாவைப்

184