பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாட்டுக்கு அருகிலுள்ள ஒரு தீவு. அந்நாட்டு அதிபர் காஸ்ட்ரோ, தம் நாட்டில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை நிறுவிக்கொண்டு, ஸோவியத் உதவிகளைப் பெற்று வருகிறார். கியூபா 44, 206 சதுர மைல் விஸ்தீரணமுள்ள சிறு தீவாயினும், அங்கிருந்து கொண்டே அவர் நாள்தோறும் வல்லரசாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சண்டைக்கு அறைகூவி அழைத்துக் கொண்டேயிருக்கிறார். கியூபா காரணமாக அமெரிக்கா உலகப் போரில் குதிக்கத் தயாராயில்லை. ஆனால் அங்கு நடப்பதை யெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டே யிருக்கின்றது. இந்நிலையில் ஸோவியத் ரஷ்யா கியூபாவில் ஏராளமான ஏவுகணைகள் முதலிய போர்க் கருவிகளைப் பல இடங்களில் குவித்து வைக்க ஏற்பாடு செய்தது. அமெரிக்கா அக்கருவிகள்யாவும் தனக்கு எதிராக ஆயத்தமானவை என்பதைக் கண்டு கொண்டது. 1962 செப்டம்பரில் புதிதாக ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏற்றிக் கொண்டு கியூபாவை நோக்கி வந்து கொண்டிருந்த ரஷ்யக் கப்பல்களைப் போதிய முன்னறிவிப்புடன் அமெரிக்கா தடுத்து நிறுத்திவிட்டது. இந்த நடவடிக்கையை எடுத்துக்கொள்ள முந்திய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி எல்லையற்ற துணிவுடன்தான் முனைந்திருக்க வேண்டும். ஏனெனில் அதுவே மூன்றாவது உலகப் போரின் ஆரம்பமாகியிருக்கும். ஆனால் குருஷ்சேவ் தம் ரஷ்யக் கப்பல்கள் கியூபா செல்லதபாடி அவைகளைத் திருப்பியழைத்துக் கொண்டார். கப்பல்களை அனுப்பும்போது, எவர் தடுத்தாலும் அவை கியூபாவை அடைந்தே தீருமென்று வீரம் பேசிய குருஷ்சேவ் பின்வாங்கி விட்டார். இந்த விவகாரத்தில் யார் கெட்டிக்காரர் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரு பெருந்தலைவர்களுடைய செய்கைகளால் உலகம் போ

187