பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 லிருந்து அப்பொழுது தப்பியதுதான் முக்கியம். வாயால் மிரட்டிக் கொண்டேயிருந்த குருஷ்சேவுக்குக் கென்னடி ஒதுங்கி இடம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். ஆனால் நிலைமை எல்லை கடந்து முற்றி விட்டபிறகு, ‘வந்து பாருங்கள் !’ என்று அவரும் சவால் விடத் துணிந்துவிட்டார். அவரைப் போலவே குருஷ்சேவும் சவாலே ஏற்றுக்கொண்டு துணிந்து எதிர்த்து நின்றிருந்தால், போரினால் இதற்குள் உலகில் பெரும் பகுதி நாசமாகியிருந்திருக்கும். கியூபா காரணமாக உலகப் போர் ஏற்பட்டு விடுமென்று அஞ்சிக் கொண்டிருந்த உலக மக்களுக்குக் குருஷ்சேவின் செயல் ஆறுதலளித்தது.

இந்தச் செயலைத்தான் சீனா கண்டிக்கின்றது. அமெரிக்காவை எதிர்த்து ரஷ்யா ஒரு கை பார்த்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது. அணுகுண்டுப் போருக்கும், ஏவுகணைகள் பாய்வதற்கும் அஞ்சாமல் போரை நடத்தியிருக்க வேண்டும் என்பது அதன் கருத்து.

கியூபாவுக்கு ரஷ்யா ஏவுகணைகள் முதலியவற்றை அனுப்பியது நியாயமா என்றால், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் தன் ஏவுகணைகளைக் குவித்து வைத்திருப்பது நியாயமா என்று பதில் கேள்வி பிறக்கும். நியாயம், அநியாயம் ஒருபுறமிருக்க, உலகிற்கே நெருக்கடியான ஒரு நிலைமை ஏற்பட்ட பொழுது, குருஷ்சேவ் நடந்து கொண்ட முறையைப் பெரும்பாலான உலக மக்கள் பாராட்டினர்கள். ஆயினும், சீனா, அமெரிக்கா வெறும் அட்டைப் புலி, அதற்கு அஞ்சக் கூடாது என்று கூறி வந்தது. இதற்குப் பதிலாகத் தான் குருஷ்சேவ், அந்த அட்டைப் புலிக்கு ‘அணு குண்டுப்பல்’ இருக்கிறது என்று எச்சரிக்கை செய்தார். சீனா கியூபாவுடன் நெருங்கி உறவாடிக்கொண்

188