பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் தோல்வியே ஏற்பட்டது.

குருஷ்சேவும் ரஷ்யாவில் ஏழாண்டுத் திட்டம் ஒன்றைத் தொடங்கினர். இத்திட்டம் மிக முக்கியமானது, ரஷ்ய மக்களின் சுகவாழ்வுக்கு ஆதாரமானது. பல்லாயிரம் ரஷ்ய வாலிபர்களைத் துாண்டி, சைபீரியாவில் குடியேறி, அங்கே புதிய தொழில்களை அமைக்கவும் குருஷசேவ் ஏற்பாடு செய்தார். வான மண்டல ஆராய்ச்சியில் ஸோவியத் விஞ்ஞானிகளை ஊக்குவித்துச் சில அதிசயங்களைச் செய்து காட்டினார். சீனாவும் இவைகளைக் கண்டு வியப்படைந்திருக்கும்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான சைபீரியா 75 லட்சம் சதுர மைல் பரப்புள்ளது. அந்தப் பெரிய நாட்டில் 2 கோடி மக்களே குடியேறிருக்கின்றனர். கோடிக்கணக்கான சீன மக்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறி வசிப்பதற்கு இடமில்லாதிருக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு சைபீரியா பற்றிய நினைவு இருந்துவருதல் இயற்கை. ஜப்பானுக்கும் சைபீரியாவைப் பற்றிய ஆசையுண்டு. ஆனால் இதுவரை சீனக் கம்யூனிஸ்டுகள் எவரும் சைபீரியப் பிரசினையை வெளிப்படையாக எழுப்பவில்லை; அடக்கமாகவே வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சீனா, கொள்கை ஒரு புறமிருக்க, ஜப்பானுடன் நெருங்கி ஒத்துழைக்கும்படியான காலம் வந்தால், இரண்டு நாடுகளும் முதலில் சைபீரியாவை வசப்படுத்திக் கொள்ளவே விரும்பும். சீனத் தொழில் முன்னேற்றத்திற்கு ஜப்பானின் ஒத்துழைப்பு அவசியம். ஜப்பான் அளவில் சிறிதாயினும், பெரும் தொழில் வளத்தைப் பெற்றுள்ளது. சீன அளவில் பெரிதாயினும், தொழில் வளத்தில் சிறியது. இவ்விரு நாடுகளும் ஒத்துழைக்கத்

195