பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தீர்மானித்தால், ஆசியப் பொருளாதாரத்திலேயே பெரும் புரட்சி ஏற்பட்டுவிடும்.

இதேபோல் ரஷ்யாவும், கொள்கை ஒருபுறமிருக்க, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க முன்வந்தால், அதுவும் உலகுக்குப் புரட்சிகரமான மாறுதலாகவே யிருக்கும். சீனத் தலைவர்களும், ரஷ்யத் தலைவர்களும் காரியவாதிகள்; கண் முன்பு காணும் நிலைமையை விட்டுக் கனவு கண்டு ஏமாறுபவர்கள் அல்லர். அதனல் சீன-ஜப்பான் கூட்டுறவும், ரஷ்ய-அமெரிக்கக் கூட்டுறவும் ஏற்படுவதில் வியப்பில்லை என்று பிரெஞ்சு அரசியல் நிபுணர் ஒருவர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்.

எல்லைப்புற காடுகள்

மஞ்சூரியா : இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் ஜப்பான் வசமிருந்த மஞ்சூரிய நாடு சீனாவுக்குத் திரும்பக் கிடைத்தது. இது இப்போது சீனக் குடியரசின் ஒரு மாகாணம். இது பிரான்ஸும் ஜெர்மனியும் சேர்ந்தால் எவ்வளவு பெரிதாயிருக்குமோ அவ்வளவு பரப்புள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்திருப்பதோடு, பாதுகாப்புக்கும் இது முக்கியமானது. சீன, ரஷ்யா, ஜப்பான் மூன்றுக்கும் இது சம்பந்தமாக 1890-லிருந்தே போட்டி அதிகம். பெரும்பாலும் சீன மக்களே இங்கு வசிக்கின்றனர். பின்னால் ஜப்பானியர்களும், ரஷ்யர்களும், சில கொரிய நாட்டு அகதிகளும் இங்கு வந்துள்ளனர்.

இரண்டாவது உலகப் போரில் இதைக் கைப்பற்றியிருந்த ரஷ்யத் துருப்புக்கள் சமாதானம் ஏற்பட்டதும், இதைக் காலி செய்துவிட்டன. பின்னாலும் ரஷ்யா இந்தப் பிரதேசத்தில் தனக்கிருந்த ரயில்வே முதலிய உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிட்டது. எனினும் ரஷ்ய நாட்டின் பாதுகாப்புக்கும் இது மிக

196