பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 முக்கியமானது என்றே ஸோவியத் தலைவர்களும் கருதுவார்கள். கம்யூனிஸ்ட் சீனா தன்னுடன் நெடுங்காலம் ஒத்துழைக்கும் என்ற எண்ணத்தினால், ரஷ்யா தன் ஆசையை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் இருந்து வருகின்றது. வேறு சில இடங்களில் சீனா தவறாக நடக்கத் தொடங்கினால், ரஷ்யா மஞ்சூரியாவில் தன் திறமையைக் காட்ட நேரிடும்.

மங்கோலியா : மங்கோலியா வெளி மங்கோலியா, உள் மங்கோலியா என்ற இருநாடுகளா யிருக்கின்றன. வெளிமங்கோலியா தனிக் குடியரசு. இது ஸோவியத் யூனியனுடன் தொடர்புள்ளது. இது தனி ராஜ்யமாக இருப்பதுதான் ரஷ்யாவின் விருப்பம். உள் மங்கோலியா சீன மாகாணம். சீன அரசாங்கப் படங்களில் வெளி மங்கோலியாவும் சீனாவைச் சேர்ந்ததாகக் காட்டப்பட்டிருக்கின்றது. கம்யூனிஸ்ட் சீனா தான் பிடித்துக் கொள்ளக் கருதும் பிரதேசத்தை முதலில் தேசப்படத்தில் சேர்த்து வரைந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. வெளி மங்கோலியாவில் சீன அரசாங்கம் கண் வைத்திருக்கின்றது. வெளி மங்கோலியத் தலைவர்களேப் புகழ்ந்தும், உபசரித்தும் மங்கோலியா இரு பிரிவுகளாயில்லாமல் ஒன்றாக இருத்தல் நலமென்று அது புத்தி புகட்டியும் வருகின்றது.

உள் மங்கோலியா பீகிங் அரசாங்கத்தின் கீழே சுயாட்சியுள்ள ராஜ்யமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கேயிருந்த மங்கோலியர்கள் சீன ஆட்சியை வெறுத்துக் கிளம்பாமலிருக்க வேண்டுமென்பதற்காக அவ்வாறு சுதந்தரம் வழங்கப்பட்டது. ஆனால் 1954-ல் பீகிங் அரசாங்கம் உள் மங்கோலியாவுடன் ஸூய்யுவான் என்ற பிரதேசத்தையும் சேர்த்துவிட்டது. இதனால் புதிதாக அமைந்த உள் மங்கோலியாவில் இப்பொழுது பத்து லட்சம் மங்கோலியரும், அவர்களைப்போல

197