பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 னர். தென் பகுதியில் சாங் சென்மோ பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் 40 மைல் இந்தியப் பிரதேசத்துள் நுழைந்து, கோங்கா கணவாயருகில் இந்தியக் காவல் படையினரை எதிர்த்துச் சுட்டு 9 இந்திய உயிர்களைப் பலி வாங்கினர். மேலும் 10 பேர்களைக் கைது செய்து ஈவிரக்க மற்ற கொடுமை இழைத்தனர்.

நம் எல்லைக்குள் துணிந்து புகுந்து சீனர் இழைத்து வந்த கொடுமைகளை யெல்லாம் இந்திய அரசாங்கம் ஆட்சேபித்துச் சீன சர்க்காருக்குக் கண்டனங்கள் அனுப்பி வந்தது. மேற்கொண்டும் அமைதியான முறையில் எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அது 1959, நவம்பர் 16-ந் தேதி ஒர் ஆலோசனை கூறிற்று. சீன வாதாடும் எல்லை வரை இந்தியத் துருப்புக்களைத் தான் அனுப்பாமலிருப்பதாயும், அதே போல் சீன தன் துருப்புக்களை வழக்கமான இந்திய எல்லைக்குள் அனுப்பாமலிருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது. டிசம்பர் 17-ந்தேதி சீன சர்க்கார் இந்த ஆலோசனையை மறுத்துவிட்டதோடு, அக்ஸாய் சின் சமவெளியின் மேற்கிலும் தெற்கிலும் தன் படைகள் பரவி நிற்கவும், சாலைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்தது.

1960இல் வெந்நீர்க் கிணறுகள் என்றழைக்கப்படும் பிரதேசத்திற்குச் சீனர் வந்துவிட்டனர். 1961-ல் சூஷ-ல் நகர் அருகில் சீனர் நுழைந்ததுடன், டம்புகுரு அருகிலும் நியாக் ஜூவிலும் சீனத் துருப்புக்கள் மூன்று புதிய காவல் நிலையங்களை அமைத்துக்கொண்டு, அந்நிலையங்களுக்குச் சென்றுவர அவசியமான ரஸ்தாக்களையும் போட்டுக்கொண்டன. அக்டோபர் 31-ந்தேதி சீனர் எல்லையை ஊடுருவல் செய்து, ஏராளமான இந்தியப் பிரதேசத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிர மித்துக் கைவசப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதை

இ. சீ. பா.—2
17