பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பர்மாவிலும் இந்தோனீஷியாவிலும் சீனா ஆதிக்கியத்தை நிலை நிறுத்தவேண்டும்.

மலாசியாவில் அதன் அதிகாரத்திற்கு இடம் செய்துகொள்ள வேண்டும்.

தேசியச் சீன அரசாங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கும் தெய்வான் தீவைப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

கீழ்த் திசை நாடுகளின் அருகே, பஸிபிக் கடலில் அமெரிக்காவுக்குச் செல்வாக்கில்லாமல் செய்துவிட வேண்டும்.

இந்த நோக்கங்களிலே சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ளச் சீனா பலாத்காரத்தில் இறங்கினால், அமெரிக்காவின் எதிர்ப்பு ஏற்படும். பலாத்காரத்தில் இறங்காமல் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்து வந்தால், நாளடைவில், ‘தெய்வானுக்காகவும் கொரியாவுக்காகவும் நாம் ஏன் போரில் கலந்து கொள்ள வேண்டும் ?’ என்று அமெரிக்கா ஒதுங்கியிருக்கும் காலமும் வரக்கூடும்.

அந்தச் சூழ்நிலை ஏற்படாதவாறு சீனா செய்து வருகின்றது. அது ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் பலாத்காரத்தில் இறங்குகின்றது. இதுவரை ரஷ்யா ஆலோசனை கூறித் தடுத்து வந்திராவிட்டால், இதற்குள்ளாகவே கீழ்த் திசையில் சீனா பெரிய உலகப்போரை மூட்டியிருக்கும்.

1962 இறுதியில் சீனா இந்தியாவின்மீது படையெடுத்ததை ரஷ்யத் தலைவரும் கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் கண்டித்திருக்கின்றனர். படையெடுப்புப் பற்றிக் குருஷ்சேவிடம் சீனா கலந்து கொள்ளவேயில்லையாம். மாஸே-துங்கின் தந்திரம் இதுதான். தாம் வகுக்கும் திட்டங்களில் ரஷ்யா வந்து மாட்டிக்கொள்ள வேண்டும்; அவர் சூழ்ச்சிப்படி

203