பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 ரஷ்யா நடந்தாக வேண்டிய நிலைமையை உண்டாக்க வேண்டும்.

இதுவரை கூறியவற்றிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். கம்யூனிஸத்திற்காக மாஸ்கோவும் பீகிங்கும் தங்கள் நாடுகளின் சொந்த லாபங்களுக்கு எதிராக நடக்கமாட்டா. ரஷ்யமக்களிற் பெரும்பாலார் சீன மக்களிடம் மோகம் கொண்டிருக்கவில்லை. தங்களுடைய நலன்களுக்கு அமெரிக்கா, மேலை நாடுகளைப் பார்க்கிலும் சீனாதான் முக்கியமான எதிரி என்பதை அவர்கள் அறிவார்கள். சீனாவை மற்ற நாடுகள் தோற்கடித்தால், அவர்கள் மகிழ்ச்சியே அடைவார்கள். தாங்களே எதிர்க்க நேர்ந்தாலும், அவர்கள் தயங்கமாட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஒரு சூழ்நிலையில் அவர்கள் சீனர்களுடன் ‘சகோதர’ வேடம் புனைய நேர்ந்துள்ளது!

இந்தியா சம்பந்தப்பட்டவரை சீனா நம் பகை நாடு. ஆனால் ரஷ்யா நம்மை ஆதரித்துவந்தது. பதினெட்டு ஆண்டுகளாக நம்மைப் பாகிஸ்தான் உறக்கமில்லாமல் செய்து வருவதற்குக் காரணமான காஷ்மீர் பிரசினையில் ரஷ்யா நம்மை முழுக்க முழுக்க ஆதரித்து நிற்கின்றது. காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்த - இந்தியாவுக்கே உரிய - ஒரு மாகாணம் என்பதை ரஷ்யா ஏற்று நிற்கின்றது. குருஷ்சேவுக்குப் பின்வந்த ரஷ்யப் பிரதமர் கோசிஜின்னும் இதை உறுதி செய்துள்ளார். ஆனல் சீனா பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு, நமக்குச் சொந்தமான காஷ்மீர் நிலத்தில் பெரும் பிரதேசத்தை அதனிடமிருந்துதான் தானம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி முதலிய நாடுகளிடமிருந்து இந்தியா பலவித உதவிகளைப் பெற்றுவருவதை ரஷ்யா ஒருபோதும் ஆட்சேபித்த

204