பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தில்லை. அத்துடன் தானும் இந்தியாவுடன் பூரணமாக ஒத்துழைத்து வருகின்றது. ஆனால் சீன அமெரிக்க ஏகாதிபத்திய வெறியர்களுக்கு இந்தியா வால் பிடிப்பதாக நாள்தோறும் வசை புராணம் பாடிவருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போராட்டத்தில் எந்த நாடும் பாகிஸ்தானுடன் சேர்ந்து போரை விரிவுபடுத்தாமலிருக்க வேண்டும் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துகொண்டே யிருக்கிறது. ஆனால் சீனா இந்தியாவுக்கு எதிராக முதலில் தன் கைப்பாவையான இந்தோனிஷியாவைக் கிளப்பிவிட்டிருப்பதுடன், வேறு பல பகை வேலைகளையுமே செய்து வருகின்றது.

இவ்வாறு நேர்ந்துள்ள பல விஷயங்களையும் கவனித்தால், இனி முன்போல் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு ஏற்படாதென்றே தோன்றுகிறது. சீனாவின் பகைவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தோழர்கள் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டால், உலகில் வல்லரசுகள் இரண்டு முகாம்களாக இல்லாமல் ஒரே முகாமில் கூடியிருக்கவும் வாய்ப்பு ஏற்படலாம்.

205