பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திபேத்து

‘சீனாவில் கம்யூனிஸம் ஏற்பட்டுப் பன்னிரண்டு (இப்போது 16) ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் எங்களுடைய தர்மம் (பெளத்த தர்மம்) இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றது. அந்தத் தர்மம் இன்னும் அதே அளவு காலம் நீடித்திருக்கும் என்று பகவான் புத்தர் நமக்கு உறுதி சொல்லியிருக்கிறார், அதன் பிறகு மீண்டும் ஒரு புத்தர் தோன்றி அதைப் புதுப்பிப்பார்.’

—தலாய் லாமா





நாடும் மக்களும்

திபேத்தைப்போல அமைதியாக ஒதுங்கி வாழ்ந்த நாடு உலகத்திலேயே வேறு கிடையாது. அந்த இமாலயப் பீடபூமி பெரும்பாலும் கடல் மட்டத்திற்குமேல் 15,000 அடி உயரமுள்ளது. அதில் மிகவும் உயரமான பகுதிகளில் குளிர்ச்சி மிகுதியால் பருப்பு வேகாது. அங்கு அரிசியைச் சமைத்தால் உலையிலிருக்கும்போது சோறாகவும், கீழே இறக்கியவுடன் ஊறிய அரிசியாகவும் ஆகிவிடுமாம்.

உலகமெல்லாம் கார்களும், ரயில்களும், விமானங்களும் பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன; இயந்திரசாலைகள் பொருள்களை உற்பத்தி செய்து குவிக்கின்றன; ஒலிபரப்பும் வானொலி நிலையங்களும், பத்திரி

206