பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 லாமா 1391-ஆம் ஆண்டில் அவதரித்தவர். இப்போதுள்ள தலாய் லாமா பதினான்காவது பட்டத்திற்கு வந்தவர். ஒரு தலாய் லாமா தம் பூத உடலை நீத்ததும், அவரே நாட்டில் ஒரிடத்தில் மீண்டும் ஒரு குழந்தையாக அவதரித்திருப்பார். அக்குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்து, எடுத்து வந்து வளர்க்க வேண்டும். அக்குழந்தை தக்க பருவமடைந்து கல்வி கேள்விகளில் தேர்ந்து விளங்கும் பொழுது, அதுவே அடுத்த தலாய் லாமாவாகப் பதவி பெறும். மங்கோலிய மொழியில் தலாய் லாமா? என்ற பெயருக்குப் ‘பெருங்கடல்’ என்று பொருள். திபேத்திய மக்கள் தலாய் லாமாவைக் ‘கியல்போ ரிம்போச்’ (மதிப்பரிய மன்னர்) என்றே அழைப்பது வழக்கம்.

பழைய தலாய் லாமா காலமானதும், நாட்டின் ஆட்சியை ஒர் அரசப் பிரதிநிதி ஏற்றுக்கொள்வார். புதிய தலாய் லாமா எங்கே அவதரித்துள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க அவரும் முக்கியமான லாமாக்களும் முயற்சி செய்வர். இதற்காகச் சில தேவாலயங்களில் குறி கேட்கப்படும். தெய்வீக அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று கவனிக்கப்படும். பதின்மூன்றாவது தலாய் லாமா 1934-இல் புகழுடம்பு எய்தியபின், அரசப் பிரதிநிதி லாமாய் லாட்ஸோ என்ற ஏரிக்குச் சென்று, பல நாட்கள் தியானமும் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார். அந்தப் புனிதமான நிலையில் ஏரி நீரில் அறிகுறிகள் தெரியும் என்பது திபேத்தியர் நம்பிக்கை. அது போலவே நீரில் சில எழுத்துக்களும், ஒரு மடாலயமும், அதை அடுத்து ஒடு வேய்ந்த ஒரு வீடும் தெரிந்தன. இவைகளே அடையாளங்களாகக் கொண்டு அரசப்பிரதிநிதி, மற்றும் சில லாமாக்கள் பெரிய மனிதர்களையும் அழைத்துக்கொண்டு, பல

208