பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இடங்களுக்கு யாத்திரை சென்றார். கடைசியாகக் கீழ்த் திசையில் கும்பும் என்ற மடாலயத்தைக் கண்டு, அதனருகில் டக்ட்ஸர் என்ற கிராமத்தில், ஏரியில் தெரிந்தது போன்ற ஒடு வேய்ந்த ஒரு வீட்டில் எதிர்காலத்தில் தலாய் லாமாவாக வரவேண்டிய சிறுவனை அவர்கள் கண்டு கொண்டனர். அவர்களை முன்னல் அறிந்திராத அச்சிறுவன் அங்கு வந்திருந்தவர்களில் முக்கியமான லாமாக்களின் பெயர்களைக் கூறினான். அவர்களுள் முதன்மையான லாமா தமது கழுத்தில் அணிந்திருந்த ஜபமாலையை அச்சிறுவன் கேட்டு வாங்கித் தானே அணிந்து கொண்டான். அது காலஞ்சென்ற 13 ஆவது தலாய் லாமாவுடைய மாலை. மறுநாள் அரசப் பிரதிநிதியின் கூட்டத்தார் புறப்படும்பொழுது, சிறுவனும் தானும் அவர்களுடன் புறப்பட ஆயத்தமாயிருந்தான். அவனே தலாய் லாமாவின் அவதாரம் என்பதையும், 14 ஆவது தலாய் லாமாப் பட்டத்திற்குரியவன் என்பதையும் யாவரும் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

1939-இல் இளம் தலாய்லாமா திபேத்தின் தலை நகரான லாலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு நாலரை வயது. ஆறாவது வயதிலிருந்து அவருடைய பதவிக்குரிய பெளத்த தர்ம நூல்களும், கலைகளும், தர்க்கம், தத்துவஞானம் முதலிய சாத்திரங்களும், சமஸ்கிருத மொழியும் போதிக்கப்பட்டன. பதின்மூன்றாவது வயது நிரம்பியபின் அவர் திபேத்தில் முதன்மையாயுள்ள திரேபங், ஸேரா என்ற இரு மடாலயங்களிலும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். மடாலயங்களுக்குச் சொந்தமான ஐந்து சமயக் கல்லூரிகளில் மகா பண்டிதர்களான லாமாககள் சமய சம்பந்தமாகக் கேட்ட கேள்விகளுக்கென்லாம் அவர் வியக்கத் தகுந்த முறையில் மறுமொழி

இ. சீ. ப.—14
209