பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வர்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். ஒரு பக்கத்திலே செல்வம் மிகுந்த சிலர், மறுபுறத்தில் ஏழைகளின் கூட்டம். இவ்வாறு பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த சமுதாய அமைப்பில் எல்லா மக்களும் அமைதியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

திபேத்தில் வெளிநாட்டார்களை நுழைய விடுவதில்லை. அந்நியர்களைக் கண்டாலே அவர்களுக்கு அச்சம். முற்காலத்தில் சீனர்களால் தொல்லை ஏற்பட்டதிலிருந்து, அவர்கள் பிறநாட்டார் எவராயினும் ஐயுற்றுப் பார்த்தல் வழக்கமாகிவிட்டது. இயற்கையான பூகோள அமைப்பில் திபேத்து ஒதுக்கமாயிருப்பதுடன், மக்களும் வெளி உறவுகளில்லாமல் ஒதுங்கி வாழவே விரும்பினர்கள். இப்படி ஒதுங்கி வாழ்ந்த நாடுகளான சீனாவிலும், ஜப்பானிலும்கூட ஐரோப்பியர் நுழைந்து விட்டனர். ஆனால் திபேத்தில் மட்டும் ஐரோப்பியர் ஒருவர் இருவர் போய் வந்ததைத் தவிர கூட்டமாகச் சென்றதில்லை.

வெண்ணெய்த் தேநீர்

கயிலாய யாத்திரை சென்ற இந்தியர்களும், ஐரோப்பியர் சிலரும் அந்நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியம் பல அரிய செய்திகளை நூல்களாக எழுதியுள்ளார்கள். எங்கும் கடல் போன்ற பெருவெளி, செடி கொடிகள், மரங்கள் இல்லாத மலைகள், அவைகளின் மீது உருகாத பணியடைகள், பனிக்கட்டி மழை, எங்கும் வரட்சியும் குளிர்ச்சியும்-இவ்வாறுள்ள நாட்டில் திபேத்தியர் தங்கள் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் மேய்த்துக்கொண்டு விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர் ஆயர் வாழ்க்கை வாழ்பவர்கள். யாக்கு எனப்படும் சடைமாடுகள் அவர்களுக்கு மிகவும் உதவி புரிகின்றன.

211