பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாமான்களை ஏற்றிச் செல்வதற்கு யாக்குகள்தாம் அவர்களுக்கு ‘லாறிக’ளாக விளங்குகின்றன. யாக்குகளில் பசுக்களும் உண்டு. அவைகளின் பாலும், வெண்ணெயும் இல்லாவிட்டால், திபேத்தியர் வாழ்க்கையே தடைப்பட்டுவிடும். குளிருக்காக அவர்கள் சடைமாடு களின் வெண்ணெயை உடல்களின் மீது பூசிக்கொள்வார்கள். தேநீரிலும் அவ்வெண்ணெயைப் போட்டுத் தான் பருகுவார்கள். நாள் முழுதும் வெண்ணெய்த் தேநீர் குடிப்பது அவர்கள் வழக்கம். சிலர் ஒரு நாளைக்கு 200 ‘கப்’ தேநீர் பருகுவார்களாம் ! திபேத்தியர் அருகில் வந்தாலே வெண்ணெய் வாடைதான் வீசும் பல வண்ணக் குடைகளுக்கும், வெய்யிலே மறைக்கும் தொப்பிகளுக்கும் திபேத்தில் கிராக்கி அதிகம். ஏனெனில் லாமாக்களுக்கும் அல்லாதாருக்கும் அவைகள் தேவை. மக்கள் எல்லோரும் கம்பள உட்சட்டை, காற்சட்டை, கையுறை முதலியவைகளை அணிந்து கொள்கிறார்கள்.

சாத்திரங்களும் சகுனங்களும்

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியான கம்பளி உடைகள் அணிவதுடன், இருபாலாரும் தலைமுடியைப் பின்னல்களாகப் பின்னித் தொங்க விட்டிருப்பார்கள். சில பெண்கள் 108 பின்னல்கள் போட்டுக் கொள்வார்கள். ஏனென்றால் லாமாக்களின் புனித சாத்திரங்கள் 108 இருந்தன!

பழமையான உளுத்துப்போன பல வழக்கங்கள் திபேத்தியரிடம் உண்டு. எதற்கெடுத்தாலும் சாத்திரம், சகுனம், குறி, ஆரூடம் முதலியவற்றின் உதவியை அவர்கள் நாடுவார்கள். மந்திரங்களும், தந்திரங்களும், மூடத்தனமான நாட்டு வைத்திய முறைகளும் நவீன முறையில் மக்களை முன்னேற விடவில்லை. மழை

212