பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 படும். அல்லது அந்த அங்கங்களைக் கொதிக்கும் எண்ணெயில் ஆழ்த்தி விடுவார்கள். ஒரு சமயம் கோயிலின் தங்க விளக்கைத் திருடியவனின் கைகளை வெட்டியதுடன், அவனை மாட்டுத் தோலில் சுற்றி மலை உச்சியிலிருந்து உருட்டி விட்டார்களாம் ! அரசியல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். ஊர்தோறும் நீதி மன்றங்கள் இல்லாததால், அவ்வப்போது லாமாக்களிலும் பெருங்குடி மக்களிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து வழக்குகளை விசாரித்து முடிவு செய்து கொள்கிறார்கள்.

பண்பாடு

மொத்தத்தில் மக்களின் பண்பாட்டை வெளிநாட்டு யாத்திரிகர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். புத்தர் பெருமானின் அன்பும், அஹிம்சையும் சமுதாயம் முழுதும் ஊடுருவிப் பரந்துள்ளன. நாட்டில் பெரும்பாலான ஏரிகளில் மீன் பிடித்தல் கூடத் தடை செய்யப்படுகின்றது. அங்கே புகைபிடித்தல் கூடக் கண்டிக்கப்பகின்றது. ஏழு ஆண்டுகள் திபேத்தில் தங்கியிருந்த ஹென்றிச் ஹேர்ரர் என்ற ஜெர்மானியர் பின் கண்டவாறு எழுதியுள்ளார். ‘நான் திபேத்தில் வாழ்ந்த நாட்களிலெல்லாம் புத்தர் பெருமானின் அறவுரைகளில் கடுகளவாவது ஐயம் கொண்டுள்ள ஒரு திபேத்தியனைக்கூடக் கண்டதில்லை. இந்த நாட்டில் வாழ்ந்த பிறகு, கருத்தற்ற முறையில் ஒர் ஈயைக் கொல்வதற்குக்கூட ஒருவனுடைய மனம் இடம் தராது.’

தலைநகர்

ஐரோப்பிய நாடுகளில் ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளின் விஸ்தீரணத்தை ஒருங்கே கொண்ட பெரிய நாடாகிய திபேத்தைப்

214