பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 மேலே குறித்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லை விஷயங்களும் வியாபார உரிமைகளும் உறுதி செய்யப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கலந்துகொள்ளாமல் திபேத்து உள்நாட்டு விவகாரங்களில் எந்த அந்நிய நாடும் தலையிட இடமளிக்கக் கூடாது என்றும் முடிவு செய்யப்பெற்றது. திபேத்து சுதந்தரமும் சுய நிர்ணய உரிமையும் பெற்றிராவிட்டால், இத்தகைய ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கமுடியுமா? மேலும் சீனா இந்த ஒப்பந்தத்தை ஆட்சேபித்தது மில்லை.

பின்னால் சீனா தன் வர்த்தகத்தில் குறுக்கிடக் கூடாது என்பதற்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் திபேத்திய ஒப்பந்தத்தைச் சீனா ஏற்றுக்கொள்வதாக 1906இல் அதனுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆயினும் பிரிட்டிஷார் ஒரே நிலையாக நிற்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் தங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டனர். 1907-இல் அவர்கள் ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், பிரிட்டனும் ரஷ்யாவும் திபேத்து விஷயத்தில் சீனா மூலமாகவே பேச்சு வார்த்தைகள் நடத்துவதாக ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் திபேத்தோ, சீனவோ கையொப்பம் இடவில்லை; ரஷ்யாவும் பிரிட்டனும் தாமாகச் செய்துகொண்ட ஒப்பந்தமேயாதலால், இது மற்ற இரு நாடுகளையும் கட்டுப்படுத்தவில்லை.

இவ்வாறு 1720 முதல் 1890 வரை சீனாவுக்குத் திபேத்தின்மீது ஏதோ அதிகாரம் இருந்து வந்தது போலவே மேலே நாட்டு அரசியல்வாதிகள் கருதி வந்தனர். சீனாவின் அதிகாரத்தைப் ‘பரம ஆதிபத்தியம்’ என்ற முறையில் ஆங்கிலத்தில் குறிப்பிடுவது வழக்கம். திபேத்தின் ஆதிபத்தியம் தலாய் லாமாவுக்குத்தான் ; ஆனால் மேற்பார்வை சீனாவுக்கு என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இந்த மேற்பார்

220