பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 வையும் பல சமயங்களில் இல்லாமற் போயிருக்கிறது; தவிரவும் திபேத்தில் தங்கியிருந்த சீனப் பிரதிநிதிகள் எது செய்யினும் திபேத்திய அரசாங்கத்திடம் சொல்லியே நடத்தி வந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலான ஆதிபத்தியம் சீனாவுக்கு இருந்திருந்தால், பிரிட்டிஷார் முன்பு திபேத்தின் மீது படையெடுத்த பொழுது, சீனா அந்நாட்டைப் பாதுகாக்க முன்வந்ததா? தோல்வியுற்ற திபேத்து தானகவே பிரிட்டனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லையா ?

ஆனால் ரஷ்யாவும் பிரிட்டனும் செய்து கொண்ட ஒப்பந்தத்தால், சீனா திமிர் பிடித்து 1910-இல் திபேத்தின் மீது படையெடுத்தது. தலாய் லாமா இந்தியாவுக்கு ஒடி வந்து பிரிட்டிஷ் பாதுகாப்பில் தங்கியிருந் தார். 1911-இல் சீனாவில் தேசியப் புரட்சி ஏற்பட்டதில் அங்கிருந்த மஞ்சூ சக்கரவர்த்தியின் ஆட்சி ஆட்டம் கண்டது. சீனப் படைகள் திபேத்தினின்று வெளியேற நேர்ந்தது. 1912-இல் திபேத்து சுதந்தர நாடாகி, சீனச் சக்கரவர்த்தியின் பிரதிநிதிகளாக அங்குத் தங்கியிருந்த இரண்டு அம்பான்களையும் விரட்டிவிட்டது. தலாய் லாமாவும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து மீண்டும் தமது பதவியை ஏற்றுக் கொண்டார். அது முதல் 1950 வரை 38 ஆண்டுகளாகத் திபேத்து, சீனவுக்கோ, வேறு எந்த வெளி நாட்டுக்கோ சிறிதும் கட்டுப்பட்டிராமல், பூரண சுதந்தரமாக இருந்து வந்தது.

ஆனால் திபேத்து தான் சுதந்தரநாடு என்பதைப் பிரகடனம் செய்து, மற்ற நாடுகளுக்குத் தெரிவித்து, அவைகளின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. இக்காலத்து உலக முறைப்படி இதைச் செய்திருக்க வேண்டும். திபேத்து விரும்பியிருந்தால், ஐக்கிய நாடு

221