பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 களையும், பழக்க வழக்கங்களையும் மதிப்பதாயும், மடாலயங்களைக் காப்பதாயும், விவசாயத்தை விருத்தி செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவ தாயும், சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும்படி பல வந்தம் செய்யாமலிருப்பதாயும் சீன சர்க்கார் உறுதியளிப்பதாக அந்த ஷரத்துக்கள் கூறின. இவையெல்லாம் வெறும் பசப்புச் சொற்கள். ஒப்பந்தத்தில் முக்கியமான விஷயம் ஒன்றுதான்-திபேத்து தன் சுதந்தரத்தை இழந்து சீனவுக்கு அடிமையாதலே அது. வேறு ஒரு கதியு மில்லாததால், திபேத்து மெளனமாகத் தலை சாய்த்து நின்றது.

சீனாவின் திருவிளையாடல்கள்

சீன அரசாங்கத்தின் பிரதிநிதியாகத் தளபதி சாங் சின் - வு லாஸாவுக்கு வந்து சேர்ந்தார். பிறகு சீனப் படையினர் 3,000 பேர்கள் வந்தனர். அதற்கப்பால் 6,000 படைவீரர் வந்தனர். லாஸாவிலும் சுற்றுப்பக்கத்திலும் அவர்களுக்கு வேண்டிய வீடுகளேயும் மனைகளையும் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கு உணவுப் பொருள் சேகரித்துக் கொடுப்பதும் திபேத்திய அரசாங்கத்தின் கடமையாயிற்று. விரைவில் தலைநகரிலேயே பஞ்சம் தோன்றியது. திபேத்தியக் குழந்தைகள் கூடச் சீனரை வெறுத்து அவர்கள் மீது கற்களை எறியத் தொடங்கின. ஜனங்கள் பொதுக் கூட்டங்கள் கூடிச் சீனப் படையினர் வெளியேற வேண்டுமென்று கோரினர்கள். தெருக்களி லெல்லாம் ‘சீனக்காரா, வெளியேறு !’ என்று கோஷங்கள் ஒலித்தன. திரும்பிய இடமெல்லாம் சீனருக்கு எதிரான செய்திகள் அடங்கிய சுவர் விளம்பரங்கள் ஒட்டப் பெற்றிருந்தன.

இந்நிலையில் தலாய் லாமாவைச் சீனாவுக்கு விஜயம்

இ. சீ. பா.—15

225