பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 செய்யும்படி சீன அரசாங்கம் அழைத்தது. அவர் சீனாவுக்குச் சென்றால், உயிரோடு திரும்ப மாட்டார் என்று மக்கள் அஞ்சினர். ஆயினும் அவர் 1954-இல் துணிந்து பயணமானர். பீகிங்கில் மாஸே - துங், பிரதமர் சூ என் - லாய் முதலியோரைக் கண்டு பேசினர். அதே சமயத்தில் இந்தியப் பிரதமமந்திரி திரு. நேருவும் அங்கு விஜயம் செய்திருந்ததால், அவரையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. ஒராண்டு சீனாவில் சுற்றுப் பிரயாணம் செய்து அங்குக் கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஏற்பட்டிருந்த தொழில் முன்னேற்றங்களை வாலிபத் தலாய் லாமா நேரில் பார்க்க முடிந்தது. அந்தச் சர்வாதிகார ஆட்சியின்கீழ் மக்கள் ஒரே மாதிரி உடைகளனிந்தும், ஒரே மாதிரிப் பேசியும், ஒரே மாதிரியாகச் சிந்தனை செய்தும் வந்ததை அவர் கண்டார். புத்திசாலியாகத் தோன்றிய கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கூடச் சீனாவின் மேன்மையையும், ஆட்சியின் வெற்றிகளையும் பற்றிக் கிளிப்பிள்ளைகள்போலக் கற்றதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர் என்று அவர் கூறியுள்ளார்.

திபேத்திய அரசாங்கத்தை நடத்துவதற்குச் சீனா ஒரு கமிட்டியை நியமித்தது. அதில் 46 திபேத்தியரும், 5 சீனரும் உறுப்பினர்கள். தலாய் லாமாவே அதன் தலைவர். எந்த அங்கத்தினரையும் நியமிக்கும் அதிகாரம் சீனாவுக்குத்தான் உண்டு. திபேத்தில் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாகச் சமய விஷயங்களில் மட்டும் பஞ்சென் லாமா என்பவருக்கும் முற்காலத்திலிருந்தே அதிகாரம் இருந்து வந்தது. லாமா கமிட்டியின் உபதலைவராக நியமிக்க்ப்பெற்றார். அவரை அரசியலிலும் அதிகாரம் வகிக்கல் செய்து, தலாய் லாமாவுக்குப் போட்டியாக அவரை நிறுத்தி விளையாடுவதே சீனாவின் சதிநோக்கம். மொத்தத்தில்

226