பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

றிப் பிரசாரம் செய்ய இது நல்ல வாய்ப்பாகுமென்றும் அவர் நேருஜியிடம் தெரிவித்தார். நேருஜி எல்லாவற்றையும் அன்போடு அமைதியாகக் கேட்டுவிட்டுத் தம் ஆலோசனைகளையும் கூறினார். அந்தச் சமயத்தில் திபேத்துக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதிருந்ததையும், அந்நாட்டின் சுதந்தரத்தை எவரும் சாதாரணமாகக் கூட ஒப்புக்கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினர். சீனரை எதிர்த்துக் கலகம் செய்தால் சீனாவிலிருந்து மேலும் மேலும் படைகளை வரவழைத்துத் திபேத்தியரை நசுக்கிவிட முடியுமென்றும், தலாய் லாமா திபேத்துக்கே திரும்பிச் சென்று சீன அறிவித்துள்ள 17 பிரிவுகளுள்ள ஒப்பந்தத்தை அமைதியாக நிறைவேற்றி வருதல் நலமென்றும் அவர் ஆலோசனை கூறினார்.

அதற்கு மறுநாள் சூ என்-லாயே புது டில்லிக்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் நேருஜியும் பேசினார், தலாய் லாமாவும் பேசினர். திபேத்தில் மக்களின் விருப்பத்தை மதிக்காமல் சீன அதிகாரிகள் புதிய திட்டங்களை அவசரப்பட்டு நிறைவேற்றுவதாகத் தலாய் லாமா தெரிவித்தார். பிரதமர் சூ, தாம் சீனாவுக்குத் திரும்பியதும் தலைவர் மாஸே-துங்கிடம் அதைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

தலாய் லாமா மீண்டும் லாஸாவுக்குத் திரும்பிச் சென்றார். சிறிது காலம் சீன அதிகாரிகள் அமைதியாக இருந்தார்கள். ஆனால் திபேத்தின் கிழக்குப் பகுதியில் வீரம் மிக்க கம்பா வகுப்பினர் பதினாயிரக்கணக்கில் மலைப்பகுதிகளில் இருந்துகொண்டு சீனரை எதிர்த்துக் கிளம்பினர். சீனப்படையினர் பீரங்கிகளையும் துப் பாக்கிகளையும் உபயோகித்து, அவர்களே வதைத்ததுடன், விமானங்களிலிருந்து குண்டுகள் வீசிப் பல கிராமங்களையும் அழித்தனர். மடாலயங்கள் தகர்க்

231